பக்கம்:இலக்கிய தீபம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 61 காரம் கற்பிக்கின்றனர்; இயற்கை வனப்பின்கண் ஈடுபட்டு நூலியற்றினாரல்லர்; உயர்வு நவிற்சி யணியையே சிறந்த தாகக் கொண்டாடுவர். சங்க இலக்கியங்களிலே பயின்று வரும் அணிகள் கவித்வ - உண்மையின் வழுவுதல் இன்று. உயர்வுகளிற்சியைச் சில்லிடங்களிற்காணலாம். பொருளினது தகுதிக்கு ஏற்ப உவமானங்கள் காணப்படும். பசும்புற் றரையிலே வெள்ளிய மலர்களை ஆங்காங்குப் பெய்தவிடத்து அது எவ்விதமாய் ஒருவனை இன்புறத்துமோ அவ்விதமாகவே சங்க நூல்களிற் காணப்படும் அணிகளும் இன்புறுத்தும். சங்கப் புலவர்கள் இயற்கை வனப்பினை நன்கு ஆராய்ந்தவ ரென்பது தென்னிதிற் புலப்படும். அக்காலத்துக் கவிஞர்கள் கூறும் உவமானங்களைக் கேட்டமாத்திரத்தில் பெரியதோர் வியப்புண்டாவதன்றி மனேபாவக அணர்ச்சியும் கூர்ந்து அண்மையடையும். ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட எலிலே 17 உவமானங்கள் ஆசிரியர் தருகின்றார். அதில் ஒவ்வொ வான் றும் மிக அழகியதாக அமைந்துள்ளது. உதாரணமாக, ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவில் கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக முதலியவைகளைக் காண்க. தலைவனைக் காணப் பெறாது வருத்தில் கயினழிந்து கிடக்கும் தலைவிக்கு, புனையா ஓவியங் கடுப்ப என உவமை கூறினார். கம்பர் பெருமானும் இவ்வித சந் தர்ப்பத்தில், ஓவியம் புகை யுண்டதே யொக்கின்ற வுருவாள் என்று கூறுகின்றனர். இவ்விரண்டினது தாரதம்மியத்தை துலைநாவன்ன மனநிலையோடு சீர்தூக்கியறிக. செய்யுள் நடையினும் சங்ககாலச் செய்யுளும் பிற் காலச் செய்யுளும் தம்முள் மிகுதியும் வேறுபட்டுக் காணப் படும். பல்வகையவாகிய அணிகளைப் பூண்ட ஒரு மங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/70&oldid=1481548" இலிருந்து மீள்விக்கப்பட்டது