பக்கம்:இலக்கிய தீபம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 இலக்கிய தீபம் உலகிலுள்ள மக்களெல்லோரும் தன்னையே உற்று நோக் கிக்கொண் டிருப்பதாக எண்ணிக் கர்வத்தினால் மீதூரப்பட்டு மதர்த்து இறுமாந்து திரியும் நடைக்கும், அழகு மிகுந்த கற்புடைய மங்கை யொருத்தி கர்வமின்றிக் கண்டார் மனம் கனிவுறும்படி, எனினும் வேற்றெண்ணம் கொள்ளமுடியாத வண்ணம் பரிசுத்தமான தோற்றத்தையுங் கொண்டு, நடக்கும் நடைக்கும் எத்துணை வேறுபாடு உண்டோ, அத்துணை வேறுபாடு இவ்விருகாலத்துச் செய்யுட்கட்கும் உண்டாம். பிற்காலத்துச் செய்யுட்களிலே கருதிய பொருளைத் திறம்பட உரைப்பர்; ஆனால் சொல்லும் முறை மனத்தினை வசீகரிப்ப தில்லை. அவை பார்ப்பதற்குத் தளுக்காக மிளிரும் ; ஆனால் உண்மையினுயர்ந்த ரத்னங்களுக்குரிய நீர், ஒளி முதலியன அவற்றிற் காணக்கிடையா. அழகாகச் செய்யப்பட்டு அணி கலன்கள் பூட்டி நிரப்பிய மரப்பாவை ஒன்றினை யந்திரக் கயிற்றினால் ஆட்டுவிப்பது போலாம் அச்செய்யுளின் திறம். அவைகட்கு உயிரில்லை யென்றே சொல்லலாம். செய்யுளின் ஓசையை நன்கு கவனித்தால், அது சங்கீ தத்தில் மிகுதியும் பயிலாது சிறிது பயின்று மெல்லிய குர லோடு ஒருவன் பாடுவானாயின் அஃது எத்துணை இன்பம் பயக்குமோ அத்துணை இன்பந்தான் பிற்காலப்பாடல் தருவதாயுள்ளது. சங்கச் செய்யுட்களெல்லாம் சுவையூறிய செழுந்தமிழ்ச்சொற்களால் அமைக்கப்பட்டு விழுமிய ஓசை யுடையனவாயிருக்கின்றன. செல்லாறுதோறும் பொரு ளாழ்ந்து, கற்றோர்க்கு இதயங் களிக்கும் வண்ணம் இயற் றப்பட்டிருக்கின்றன. ஓசையைக் கருதினால், அது சங்கீத ஞானமும் பயிற்சியும் நிரம்பிய ஒருவனிடத்துக் கணகண வென்று சாரீரம் பேசுவது போல, மிக்க இனிமையாய், இழைந்து செல்வதாய், அழகாய் இருக்கின்றது; கேட்கக் கேட்க ஆசை கிளருகின்றது. உதாரணமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/71&oldid=1481549" இலிருந்து மீள்விக்கப்பட்டது