பக்கம்:இலக்கிய தீபம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுகவ்வாடையும் சுக்கீரரும் பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து நன்னுதல் உலறிய சின்மெல் லோதி நெடு நீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண், வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச் செவ்விரற் கொளீ இய செங்கேழ் விளக்கத்து புனையா ஓவியங் கடுப்ப என்றவரும் அடிகளை உத்து கோக்குக. 63 பிற்றைக் காலத்து நூல்களிற் பலவும் சமயவுணர்ச்சி மிக்க நாளிற் றோன்றினமையாலே அதன் பேராற்றலால் செய்யுட்களெல்லாம் வலித்து ஈர்க்கப்பட்டு அதன் வழிச் செல்கின்றன. பண்டைக்கால நூல்களிலே இவ்வியல்பு காணக்கிடையாது. இதனால் தமிழ்மொழிக் குண்டாகிய ஏற்றமும் தாழ்வும் இங்கே விரிக்கித் பெருரும். பண்டைக்கால வழக்க வொழுக்கமும் நாகரிகமும் இனி, இந்நூலிலிருந்து உணரத்தக்க பண்டைக்காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் சிறிது நோக்குவோம், அக்காலத்தில் சிற்ப சாஸ்திரம் வல்லுநர் நல்ல மங்கள சமயம் பார்த்து அந்நேரத்தில் திக்குக் தேவதைகளை வணங்கி மனைவகுத்து வந்தனர். அரண்மனை முதலியன மிகவும் உயர்ந் தனவாய்,சாளரங்களுள்ள மேல்நிலைகள் பல உடையன வாய்க் கட்டப்பட்டன. விசிறி முதலியன இயற்றுதலிலும் இடைவெளி சிறிதுமின்றிப் பலகைகளைப் புணர்த்து முறை மையிலும் கைவல்லுநர்களாய் இருந்தார்கள். வண்ணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/72&oldid=1481550" இலிருந்து மீள்விக்கப்பட்டது