பக்கம்:இலக்கிய தீபம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 இலக்கிய தீபம் கொண்டு வடம் முதலியன தீட்டுவற்றும் சிறந்தவர்களாய் விளங்கினார்களென்பது என்பதனானும், புனையா ஓவியங் கடுப்ப மெழுகுசெய் படமிசை என்பதனானும் அறியக் கிடக்கின்றது. கிரேக்கர் முதலிய பிறதேசத்தாரோடு அக்காலத்தவர்கள் நெருங்கிப் பழகிவந் தார்கள். இவர்கள் தமிழ் காட்டிற்கு வியாபாரத்திற்காக வருவது வழக்கமா யிருந்தது. இது வடவர் தந்த வான்கேழ் வட்டம் யவன ரியற்றிய வினைமாண் பாவை என்ற அடிகளால் புலப்படுகின்றது. சங்கீதத்தினும் காட்டியத்திலும் அவர்கள் பயிற்சி மிக்குடையவர்களா விருந்தனர். ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார் என்ற அடியால் இது விளக்குகின்றது அக்காலத்தி லுள்ளவர் வான சாஸ்திரம் முதலியவற்றை நுட்பமாய் அறிந்திருந்தனர். மாதிரம் விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு ஒருதிறஞ் சாரா அரைநா ளமையத்து என்றும், செல்வனொடு நிலைஇய, உரோகிணி நினைவனள் நோக்கி என்றும், நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து என்றும் வருவனவற்றால் இது உணரப்படும். அரசன் போர் வீரரை வித்தியாசம் பாராட்டாது சமமாய் நடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/73&oldid=1481551" இலிருந்து மீள்விக்கப்பட்டது