பக்கம்:இலக்கிய தீபம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5. பாலையின் அரங்கேற்று மண்டபம் பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தவன் சோழன் கரிகாத் பெருவனத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணஞர். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவளுகிய கரிகாலன் உணர்ந்து 16 - கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது. தத்து நீர்வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொடாறுநூ றாயீ ரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (இராச - 21 என்று கலிங்கத்துப் பரணி கூறும். சங்கர உலாவிலும், சோழன் பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு கோடி பசும்பொன் கொடுத்தோனும் (10) என இச்செய்தி குறீக்கப்பட்டுள்ளது. பிற்காலத்ததாகிய தமிழ்விடு ததன் என்று பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே கூறுகிறது. இவ்வொரு செய்தியே இதுவரை அறியப்பட்டது. இப்பொழுது புதுச் செய்தி ஒன்று ஒரு சாசனத்தால் வெளியாகின்றது. பட்டினப்பாலையை அரங் கேற்றுவதற்குப் பதினது தூண்கள் அமைந்த பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது என ஓர் சாசனச் செய்யுள் தெரிவிக்கிறது. அச்செய்யுள் வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/77&oldid=1481679" இலிருந்து மீள்விக்கப்பட்டது