பக்கம்:இலக்கிய தீபம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாலையின் அரங்கேற்று மண்டபம் வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே. 69 இச்சாசனம் திருச்சி ஜில்லாவிலுள்ள திருவெள்ளறை யில் செதுக்கப்பட்டுள்ளது. இன்றுகாறும் இது வெளியிடப் படாதது. இதில் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் ராஜ ராஜனுக்கும் நிகழ்ந்த போர் ஒன்று கூறப்பட்டுள்ளது என்பது சரித ஆராய்ச்சியாளர் கருத்து. இச்செய்யுளில் கண்ணன் என்றது கடியலூர் உருத் திரங் கண்ணனாரை. அரமியம் என்றது அரண்மனைமுற் றத்தை. இங்குக் குறித்த போர் நிகழ்ச்சியால் அரண்மனைப் பகுதிகளில் பதினாறுகால் மண்டபம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் அழிவுற்றன. மிகப் பூர்வகாலத்தே பட்டினப் பாலை அரங்கேறிய மண்டபம் ஆதலாலும், அதற்கு அழிவு செய்யின் தமிழிலக்கிய ஞசபகச் சின்னமொன்றினை அழித்த தாக முடியும் ஆதலாலும், அது அழியாது பாதுகாக்கப் பட்டது போதும்! இதனால் தமிழிஅக்கியச் சின்னங்களை எம் மூதாதையர் எவ்வாறு போற்றிவந்தனர் என்பது விளங்கும். இனி, பட்டினப்பாலைக்கும் பதினாறு என்ற தொகைக் கும் ஓர் இயைபு இருத்தல் ரேசக்கத்தக்கது. பதிரை கோடிப் பொன் இந்நூற்குப் பரிசிலாக வழங்கப்பட்ட தென்பது வரலாறு. பதினாறு தூண்களுள்ள ஒரு மண்ட பத்தின்கண் இந்தூன் அரங்கேற்றப்பட்ட தென்பது இச் சாசனத்தால் புதுவதாக அறியப்படும் வரலாறு. ஒருகால் பதினாறு கோணங்களிலும் தூண்கள் நிறுவி, ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/78&oldid=1481680" இலிருந்து மீள்விக்கப்பட்டது