பக்கம்:இலக்கிய தீபம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 70 இலக்கிய தீபம் என தூணிலும் சில பொற்காசுகளைத் தூக்கியிட்டு, பதினாறு கோடிப் பொன் என அவற்றை வழங்கினர் என்று நாம் கொள்ளலாம். இங்கு, பதினாறு கோடிப்பொன் வந்துள்ளதும், பதிற்றுப்பத்தில் காப்பி யாற்றுக் காப்பிய னாருக்கு 40-நூறாயிரம் பொன்னும், காக்கை பாடினியார் நச்செள்ளையாருக்கு 9 - துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும், கபிலருக்கு நூறாயிரம் பொற்காசும், அரிசில் கிழாருக்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், பெருங்குன் றூர்கிழாருக்கு 32- ஆயிரம் பொற்காசும் பரிசிலாக அளிக்கப்பட்டன என வந்துள்ளனவும் உயர்வு நவிற்சி என்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இராச ராஜன் உலா வின் கண்ணிதோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகக் கூறுவதும் உயர்வு நவிற்சியாகவே கொள்ளத்தக்கது. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (குறள்,104) என்ற திருக்குறளைப் பின்பற்றி இவ்வாறு புனைந்து கூறி னார்கள்போலும் ! அன்றியும் ஒவ்வொரு சிற்றரசனும் தன் நாட்டிலுள்ள யானை முதலியவற்றை முற்காலத்தில் பரிசி லாக வழங்கிவந்தனன். இதற்கு மாறாகப் பொன்னை வழங்கத் தொடங்கியது புலவர்களுக்கு எத்தனையோ அருமையாகத் தோன்றி யிருத்தல் வேண்டும். இவ் அருமைப்பாட்டினைத் தெரிவித்தற்கு உயர்வு நவிற்சியணி ஆளப்பட்டது எனக் கொள்ளுதலும் தகும். இது எவ்வாறாயினும், மேற்குறித்த சாசனச் செய்யுள் ஓர் அரிய இலக்கிய வரலாற்றை உணர்த்துகின்றது என் தற்கு ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/79&oldid=1481681" இலிருந்து மீள்விக்கப்பட்டது