பக்கம்:இலக்கிய தீபம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகை நூல்களின் காலமுறை 73 குறுந்தொகை 270.ம் செய்யுளைப் 'பாண்டியன் யன்னாடு தந்தான்' என்பவன் இயற்றினானெனக் காணப் படுகிறது. நற்றிணையில் இரண்டு செய்யுட்களை (98,301) இயற்றியவன் பாண்டியன் மாறன் வழுதி எனக் குறிக்கப் படுகிறது. முற்கூறிய பன்னாடு தந்தானுக்கு மாறன் வழுதி என்ற பெயரும் உள்ளது; பிறர் யாருக்கும் இப்பெயருள்ள தாகத் தெரியவில்லை. நற்றிணையைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்று கூறப் படுவது இதனை நன்கு விளக்குகிறது. எனவே, பன்னாடு தந்தானும் மாறன் வழுதியும் ஒருவரே என்று கொள் ள்ளுவ தற்குச் சான்று உளது. மேற் கூறியபடி 'பன்னாடு தந்தான் ' குறுந்தொகைச் செய்யுளொன்றை இயற்றியவனாதலினால், இந்நூலைத் தொகுத்த காலத்துக்கு முன்பாகவேனும் அல்லது சம காலத்திலேனும் இவன் வாழ்ந்தவனாதல் வேண்டும். நற்றிணை யைத் தொகுத்தவனும் இவனேயாவன். ஆகவே, இவ் விரண்டு நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தில் தொகுக்கப் பட்டனவென்று கொள்ளலாம். இங்ஙனமாயினும், முதலில் தோன்றியது குறுந்தொகையென்பது வேறொரு செய்தியால் தெளிவாகின்றது.இத்தொகைநூற் செய்யுட்களிலே நான் கினை (9,356,378,396) இயற்றியவர் கயமனார் என்ற புலவர். இப்பெயர் பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறுங் கய மூழ்கு மகளிர் கண்ணின் மானும் (9) என்ற செய்யுள் காரணமாகப் பிறந்தது என்று கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/82&oldid=1481684" இலிருந்து மீள்விக்கப்பட்டது