பக்கம்:இலக்கிய தீபம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 இலக்கிய தீபம் லாம். டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களும் இக்கருத்தே கொண்டுள்ளார்கள் என்பது அவர்களது குறுந்தொகைப் பதிப்பின் முகவுரையால் (பக். 3) அறியலாகும். குறுச் தொகையைத் தொகுத்தார் யாதாமொரு காரணத்தால் இயற் பெயரை நீக்கி இப்பெயரைக் கற்பித்து வழங்கி யிருக்கலாமென்றல் பொருத்தமுடையதே. இப்பெயர் நற்றிணைப் புலவர்கள் வரிசையுள்ளும் காணப்படுகிறது. எனவே, காரணப் பெயரின் விளக்கத்தைக் காட்டியமைந்த குறுந்தொகையும், அப்பெயரை எடுத்தாண்ட நற்றிணையும், முறையே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியிருக்க வேண்டும். குறுந்தொகை நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமை யும் கொண்ட தென்பதும் நற்றிணை நூல் ஒன்பதடிச் சிறுமை யும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டதென்பதும் கற்றார் அறிவர். இந்த அடியளவும் இம்முறையையே ஆதரிக் கிறது. ஒரே தலைமுறையில் இரண்டு நூல்களும் சற்று முன்பின்னாகத் தோன்றின என்று கொள்ளுதல் பலவகை யாலும் பொருத்த முடையதாம். இதனைத் இனி, அகநானூற்றை நோக்குவோம். தொகுப்பித்தவன் உக்கிரப் பெருவழுதி. இவன் இயற்றிய செய்யுட்கள் அகநானூற்றிலும் (26), நற்றிணையிலும் (98) காணப்பெறுகின்றன. எனவே, நற்றிணை தொகுக்கப்பெற்ற காலத்தேனும் அல்லது சிறிது முன்பாகவேனும் உக்கிரப் பெருவழுதி வாழ்ந்தவனாதல் வேண்டும். இவன் அகநானூறு தொகுத்த காலத்தும் இருந்தவன். ஆதலால் இவன் இருந்த காலத்தேயே நற்றிணையும் அகநானூறும் தொகுக்கப் பெற்றன என்று கொள்ளலாம். இரண்டு நூல்களும் பெரும் பாலும் சமகாலத்தன என்று கொள்ளுதல் பொருத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/83&oldid=1481685" இலிருந்து மீள்விக்கப்பட்டது