பக்கம்:இலக்கிய தீபம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 இலக்கிய தீபம் பெருங்கடுங் கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழ னல்லுத் திரன்முல்லை நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி. இச் செய்யுள் 'இன்னிலை' 'ஊசிமுறி' முதலிய நூல் களின் சிருஷ்டி கர்த்தரென்று கொள்ளத்தகும் காலஞ் சென்ற த.மு.சொர்ணம் பிள்ளையவர்கள் முதன் முதலில் வெளியிட்டது. தொகை நூல்களுள் ஒன்றாகிய கலித் தொகையில் ஒவ்வொரு திணையையும் இயற்றினாராக ஆசிரி யர் ஐவரைப் பெயர்களால் விளக்குதலால், இது பழஞ் செய்யுளெனப் பலராலும் மயங்கிக் கொள்ளப்பட்டது. இச் செய்யுள் என் பார்வைக்கு வந்த இந்நூலின் ஏட்டுப் பிரதிகளில் காணப்படவில்லை. இந்நூலை முதன் முதலில் வெளியிட்ட ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளையவர் களுக்குக் கிடைத்த பிரதிகளிலும் இது காணப்பட்டதில்லை. இருக்குமாயின், அவர்கள் காட்டியிருப்பார்கள். காட்டாதத னோடு, இச் செய்யுட்கு முற்றும் மாறாக நல்லந்துவனாரே நூல் முழுதும் இயற்றியவரெனவும் கருதினார்கள். இக் கொள்கை மிகவும் வன்மையுடையதென்றே தோன்றுகிறது. கலித்தொகையை நல்லந்துவனார் கோத்தாரென்று கூறும் நச்சினார்க்கினியரும் இங்ஙனம் ஒரு செய்யுள் உளதாகக் குறித்ததில்லை. ஒவ்வொரு திணையையும் இன்னார் இயற் றினாரெனவும் இவ்வுரைகாரர் காட்டியதில்லை. அன்றியும், குறிஞ்சிக் கலியை இயற்றியவராகக் கூறும் கபிலர் மேற் குறித்த ஆறுதொகை நூல்களிலும் பத்துப் பாட்டிலுமாக 206 செய்யுட்கள் இயற்றியுள்ளார். இவற்றுள் ஒன்றி லேனும் பாண்டியனைக் குறித்தும் கூடல் நகரைக் குறித்தும் யாதொரு செய்தியும் இல்லை. இப்புலவருக்கும் பாண் டியனுக்கும் யாதோர் இயைபும் இல்லை. ஆனால் குறிஞ்சிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/91&oldid=1481691" இலிருந்து மீள்விக்கப்பட்டது