உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7. குறுநதாலம 1 திகழும் ஆண்டு தமிழன்னையின் திருவுள்ளத்தை மகிழ் வித்த ஓர் நல்யாண்டாகும். அவளுடைய பேருடைமை அளுள் ஒன்ருகிய குறுந்தொகை நூற்றுக்கணக்கான வரு உங்களாக ஏறியிருந்த துருமுதலிய மலினங்கள் போகப் பரிசோதிக்கப் பெற்று இரண்டு தில்கட்கு முன்னர்த்தான் அவன்பான் உய்க்கப் பெற்றது. இப்பொழுது அவள் மிக்க ஒளியுடனும் பெருமிதத்துடனும் விளங்குகின்றாள். நவ மணிகளும் இழைக்கப்பெற்ற அவனது திருமுடியும், பா வகை யணிகளும் மிளிரும் அவளது தெய்வத்திருமோனியும், நமக்குக் கண் கொள்ளாத காட்சியாயுள்ளன. தமிழ்மொழிக்கு இத்துணைச் சிறப்புத் தரத்தக்க பேரிலக் கியத்தை ஆராய்ந்து அதன் நயங்களை உணரவேண்டுவது அவசியமாகும். இந்த அவசியம் பற்றியே இந்துலேஸ் குறித்து யான் பேச முன்வந்தது, இந்நூல் தொகை நூல்களைச் சார்ந்தது. 6 தொகை யென்ற வழக்கு உரைகாரர்கள் பலராலும் கூறப்பட்டதே யாகும். தொகைகளினுங் கீழ்க்கணக்குக் களினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க என்றார் நச்சினார்க்கினியர் (தொல்.அகத்.6, பக்.19). இவர் தாமே 'தொகைகளிலுங் கீழ்க் கணக்கிலும் உள்ள

  • சென்னை ஸர்வகலாசாலையில், 1937-ம் ஆண்டில், டாக்டர் சாமிநாதையரவர்களது முன்னிலையில் பேசியது. பின்பு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா வெளியீடாகிய ' கரந்தைக் கட் டுரை என்ற தொகுதியில் 1938-ம் வருடம் வெளிவந்தது.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/94&oldid=1481694" இலிருந்து மீள்விக்கப்பட்டது