பக்கம்:இலக்கிய தீபம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 87 படி அத்துணை யழகுவாய்ந்து, நக்கீரர் சரிதத்தோடு பிணைப் புண்டு கிடக்கின்றது. இச்செய்தி தமிழ் மக்கள் யாவரும் அறிந்ததே. யான் குறிப்பிடுஞ் செய்யுள் கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீ யறியும் பூவே என்பது. இதனை யியற்றியவர் இறையனார் என்று பெயர் சிறந்த ஒரு தமிழ்ப்புலவர். இப்பெயருடையாரொருவர் இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் நூலை இயற்றியுள்ளா ரென்பது நாம் அறிந்து மகிழத்தக்க ஒரு செய்தியாம். இவ்வாறு கொள்ளுதலால், நமது தெய்வ பக்திக்கு யாதோரிழுக்குமின்று. இதனை நாம் நன்றாக மனங்கொள்ளுதல் வேண்டும். மேலே சுட்டிய குறுந்தொகைச் செய்யுள்பற்றி யெழுந்த சரிதத்தை விரிவாகக் கூறவேண்டும் ஆவசியகம் இல்லை. ஆனால் அச்சரிதத்தின் உட்கிடையைக் குறித்துச் சில சொல்ல வேண்டுவது இன்றியமையாததென நினைக் கின்றேன். செய்யுளானது இயற்கையிற் சிறிதும் வழுவா திருக்க வேண்டுமென்பது ஒரு கொள்கை. செய்யுள் சாமான்ய வியற்கையில் வழுவாதிருக்க வேண்டு மென்பது தக்கதொரு நியமமாகாது; மனோபாவனையினாலும் கவித்துவ சக்தியினாலும் நெறிப்பட்டுச் சென்று கவித்துவ வுண்மை யினை வெளிப்படுக்க வேண்டுமென்பது பிறிதொரு கொள்கை. இவ் இருகொள்கைகள்பற்றிய விவாதமே மேற்குறித்த சரிதத்தின் உட்கிடை. உண்மைக் கவிதை இக் கொள்கை களால் பாதிக்கப்படாது சிறந்து விளங்குமென்பது முடி வாக நாம் உணரத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/96&oldid=1481696" இலிருந்து மீள்விக்கப்பட்டது