________________
108 இலக்கிய மரபு சிவந்து முகம் வீங்கிய கதையாசிரியர்கள் பலர் உண்டு; அவர்கள் எழுதிய கதையின் ஏடுகள் அந்தக் கண்ணீரால் நனைந்த ஏடுகளே ஆகும். உயர்ந்த நாவலில் படைக்கப்படும் கதைமாந்தர், உண்மை மனிதர் போல் ஆகிவிடுகின்றனர். உண்மை மனி தர்க்காக வருந்திக் கண்ணீர் விடுதல் போல், அவர்களுக் காகக் கற்பவர் கண்ணீர் வடிக்கின்றனர். அவ்வாறே சினம் கொள்கின்றனர், வெறுக்கின்றனர்,மகிழ்கின்றனர். வெறுங் கற்பனை மாந்தர் இவ்வாறு உயிரும் உணர்ச்சி மிக்க வாழ் வும் பெறுமாறு செய்தல், படைப்பவரின் அரிய திறனே ஆகும். கற்பவர்க்கு மட்டும் அல்லாமல், படைப்பவர்க்கும் அவர்கள் அவ்வாறு உண்மை மனிதர் போல் ஆகிவிடு கின்றனர். நாவலை எழுதும்போதே அவ்வாறு ஆகிவிடுவ தாக ஆசிரியர் சிலர் தம் அனுபவத்தைத் தெரிவித்துள்ள னர். "என் கதைமாந்தரை நான் ஆள்வதில்லை. நானே அவர்களின் வயமாக உள்ளேன் ; அவர்கள் தம் விருப்பம் போல் என்னை நடத்துகின்றனர்" என்று ஆங்கில நாவலா சிரியர் தாக்கரே என்பவர் கூறியுள்ளது காணலாம். காதலரின் கண்ணீர் நின்று வாழும் நாவல்கள் பல காதலரின் உயர்ந்த தியாக வாழ்க்கை பற்றியனவாக உள்ளன ; காதலரின் முறுவலைவிட அவர்கள் ஒருவர் ஒருவர்க்காக விடும் கண்ணீ ரைப் பற்றியனவாக உள்ளன. பத்தில் ஒன்பது பங்கு நாவல் கள் காதல் பற்றியனவாகவே உள்ளன என்றும், மனித வாழ்க்கையில் எங்கும் பரவிய தாகவும் எல்லோர்க்கும் உள்ள தாகவும் அமைந்த அடிப்படை உணர்ச்சியாகவும் இருத்த லால் அது அவ்வாறு சிறப்பிடம் பெறுகிறது என்றும், வேறு எந்த உணர்ச்சியும் கற்பவரின் உள்ளத்தை அது