உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 இலக்கிய மரபு அமைய வேண்டும் என்ற இலக்கணம் கூறி வரையறுப்பது பொருந்தா முயற்சியாகும்.* நாவலின் வடிவ அமைப்பு, அந்தந்த ஆசிரியரின் கற்பனை வளத்திற்கேற்ப மாறி அமையக் கூடியது என்று கூறுதலே பொருத்தமாகும். தொடக்கமும் முடிவும் பற்றிய அமைப்பில் மட்டும் அல்லா மல், கதைமாந்தரைப் படைத்து அமைத்தல் முதலியவற் றிலும் நாவலுக்கு வரையறுத்த முடிந்த முடிபான கட்டுத்திட்டம் இல்லை. தாக்கரே என்ற ஆங்கில நாவ லாசிரியர், தம் சிறந்த நாவலைப் பற்றிக் குறிப்பிட்டபோது, அது தலைவன் என்று ஒருவன் இல்லாத கதை என்றாராம். ஆதலின், நாவலின் இயல்பான வளர்ச்சிக்குக் கட்டுத் திட்டம் தேவையில்லை என்பர். தீயன ஒரு நாவலைக் கெட்டதாக அமைப்பதைவிட, இல்லாத சுவை எல்லாம் புகுத்தி வாழ்க்கைக்கு ஒட்டாததாக ஆக்கு வது தவறாகும். உண்மை வாழ்க்கை கவையற்றதாக ஆகும் அளவிற்குக் கவர்ச்சியும் பரபரப்பும் ஊட்டி, பயனற்ற மாந்தரையும் வாழ்க்கையில் என்றும் காணாத காட்சிகளையும் அமைத்துக் கற்பவரின் சுவையுணர்வைக்

  • One of the demerits and weaknesses of our present-day critics is that they seek to make too much of a cult of this pursuit of something called Form (almost a platonic ideal) in the novel, and to force its massive vitality into a narrow channel. And this is being done at a time when the material of the novelist, human society, is in a process of flux.

Richard Church, The Growth of the English Novel, pp. 171-172. †Thackeray rightly called his great book (surely one of the most inportant novels, from cvery point of view, in our language) a novel without a hero.' Richard Church, The Growth of the English Novel, p.160.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/122&oldid=1681857" இலிருந்து மீள்விக்கப்பட்டது