________________
190 இலக்கிய மரபு 1. அம்மை: சில மென்மையான சொற்களால் அமை வது; சில அடிகளாலேயே அமைவது. சின்மென் மொழியான் தாய பனுவலொடு அம்மை தானே அடிநிமிர்பு இன்றே. திருக்குறள் நாலடியார் போன்றவற்றை எடுத்துக்காட் டாகக் கூறலாம். 2. அழகு : எளிய இயற்சொற்களால் அமையாமல் திரி சொற்களால் அமைந்துவருவது. செய்யுள் மொழியான் சீர்புணைந்து யாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே. இத்தகைய நூல் நன்கு கற்றவர்க்கு மட்டுமே விளங்கக் கூடியதாக இருக்கும்; கடுநடை (pedantic style) உடைய தாக இருக்கும். பதிற்றுப்பத்து என்னும் சங்கநூலும், ஒட்டக்கூத்தர் இயற்றிய சில நூல்களும் எடுத்துக்காட் டாகக் கூறத் தக்கன. 3. தொன்மை : இடையிடையே உரைநடை கலந்து வருவது ; பழமையாய் வழங்கிவரும் பொருள்கள் பற்றியது. தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே. இராமாயணம், பாரதம் முதலிய கதைகள் பற்றி அமையும் நூல்களைக் குறிப்பிடலாம். 4. தோல்: இனிய ஓசையுடைய சொற்களால் சிறந்த பொருள் பற்றி அமைவது; அல்லது பரந்த பல சொற்க ளால் பல அடிகளாக நீண்டு அமைவது. t
- செய்யுளியல், 233.
234. 235.