உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

192 இலக்கிய மரபு 8. இழைபு : வல்லின மெய் பல வராமல், எழுத்தெண் ணிக் கூறப்படும் ஐந்து அடிகளால் அமைவது; நிறைந்த சொற்கள் நிரம்பி வருவது. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகின் இழைப்பின் இலக்கணம் இயைந்த தாகும். ஓசை இவற்றுள், அம்மை அழகு தோல் இயைபு புலன் இழைபு என்பவை இலக்கியத்தின் வடிவு பற்றிய மரபுகள். தொன்மையும் விருந்தும் பொருள் பற்றிய மரபுகள். உணர்ச்சிகள் இலக்கியத்துள் அமையும் உணர்ச்சிகளை, அவை புலனாகும் "மெய்ப்பாடுகளை விளக்கும் வகையால் எடுத் துரைத்தார் தொல்காப்பியனார். நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப என்று முதன்மை பெற்று விளங்கும் எட்டு மெய்ப்பாடுகளை யும் கூறி,பிறகு அவையல்லாத உடைமை இன்புறல் முதலி யவற்றையும் கூறினார். அகப்பொருள் சிறந்த இலக்கியப் யகுதியாகத் தனிவளர்ச்சி பெற்றுள்ள காரணத்தால், அகப் பொருளுக்குரிய மெய்ப்பாடுகளைத் தனியே ஆறுபகுதியாக விளக்கினார். இவை எல்லாம் எல்லாக் காலத்திற்கும்

  • செய்யுளியல், 240.

மெய்ப்பாட்டியல், 3. + $ 12. 18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/196&oldid=1681917" இலிருந்து மீள்விக்கப்பட்டது