உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 193 பொதுவான உணர்ச்சிகள் பற்றியன ஆதலால், பிற்காலத் தில் மாறுதல் நிகழ இடம் இல்லை. நடுவுநிலை அல்லது சாந்தம் என்ற ஒன்றை மேற்கூறிய எட்டோடு சேர்த்து ஒன்பதாகக் கூறினர் பிற்காலத்தார் சிலர். அடிப்படையானவை மாற் காலம் எவ்வளவு மாறியும், காதல் வீரம் தியாகம் முதலிய அடிப்படையான வாழ்க்கைப் பகுதிகள் வில்லை. அவற்றின் காரணமும்,விளைவும் முதலான புற வாழ்க்கைப் பகுதிகளே மாறிவருகின்றன. ஆதலின் காதல் வீரம் முதலானவை பற்றிய பாட்டுக் களின் உணர்ச்சியில் வேறுபாடு இல்லை. ஆயின், காத லுக்கு உரிய சூழ்நிலை, வீரத்துக்கு உரிய காரணம் முத லானவை மாறியுள்ளன. பழங் காலத்துக் காதல் வீரம் பற்றிய பாட்டுக்களைக் கற்கும்போது இந்த மாறுதல்கள் புலனாகும். மாறாத அடிப்படை யுணர்ச்சிகளுக்குப் புது வடிவம் தந்து படைத்தளித்தலே புலவர்தம் திறனாகும். இந்த மாறுதல்களைப் புறக்கணித்துப் பழங்காலத்துப் பாட்டுக்களைப் போலவே இக்காலத்திலும் கையுறையாகத் தழை கொய்துவரல் முதலியவற்றையோ, யானைப்போர் களவேள்வி முதலியவற்றையோ அமைத்துப் பாடுதல் கண்மூடித் தன்மையாகும். இவ்வகையில் இலக்கிய மரபு. கள் துணை செய்வதில்லை; உள்ளவாறு பாட முயலும் உண்மையியல் தான் துணை செய்து விழிப்புறச் செய்கிறது. Now that is what the greatest poetry has always built on. Its roots strike deep into the eternally familiar. But the gift of the gods to genius is the power to catch and fix that familiar in the recurrent act of becoming new. That is originality. -J.L. Lowes, Convention and Revolt in Poetry, p. 86.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/197&oldid=1681905" இலிருந்து மீள்விக்கப்பட்டது