உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

194 இலக்கிய மரபு கையுறையாகத் தழை கொடுத்தல் மடலேறுவே னெனக் கூறுதல் முதலியவை மாறிய போதிலும், அடிப் படையான காதலுணர்ச்சி மாறவில்லை. பழைய பாட்டுக் களில் அது மிகுதியாகப் பாடப்பட்டது போலவே, இடைக் காலத்து இலக்கியங்களிலும் இக்காலத்து இலக்கியங்களி லும் மிகுதியாக இடம் பெற்றுள்ளது. அவ்வக் காலத்துச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, காதல்பாட்டுக்களில் மாறுதல் சில ஏற்பட்டுவரினும், எக்காலத்து இலக்கியத்திலும் அதுவே சிறப்பிடம் பெற்று விளங்கக் காணலாம்.* இடைக்காலத்தில் (கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் சில நூற்றாண்டுகள் வரையில்) பக்தியியக்கம் சிறப்புற்றிருந்த போது, மனித உள்ளத்தின் காதலுணர்ச்சியைப் பாடு வோர் குறைந்தனர். ஆண் - பெண் காதல் பாடப்படாமல் கடவுள் - அடியார் காதல் பாடப்படுவதாயிற்று. காதல் பாட்டுக்களின் வாய்பாடுகளும் கற்பனைகளும் புதிய கடவுட்காதல் பற்றிய பாட்டுக்களுக்கு அவ்வாறே பயன் பட்டன. சமயத் துறையில் வழிபாட்டு உணர்ச்சிக்குப் பழைய காதல்கற்பனைகள் முழுதும் பயன்பட்டு, இலக்கி யம் புதிய வடிவம் பெற்று வளரலாயிற்று எனலாம். பழைய Of all the emotions treated of in literature the emotion of love is that which receives most attention, and as a rule most impression on the reader. Knowledge of the manner in which it is apprehended and represented is an important factor in any real understanding of the spirit of an age. -G. Brandes, Main Currents in Nineteenth Century Literature, p. 222. In India, the conditions of luman love, from the first meeting of eyes to ultimate self-oblivion, have seemed spiritually significant, and there has always been a free and direct use of sexual imagery in religious symbolism. - Ananda K. Coomaraswamy, The Transformation of Nature in Art, P. 44.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/198&oldid=1681902" இலிருந்து மீள்விக்கப்பட்டது