உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

196 இலக்கிய மரபு கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில் கண்ணன் அழகுமுழு தில்லை; நண்ணு முகவடிவு காணில்-அந்த நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்; ஓய்வும் ஒழிதலும்இல் லாமல் -அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயும் உரைப்பதுண்டு கண்டாய்-அந்த மாயன் புகழினையெப் போதும். இந்தப் பாட்டுக்களின் கால இடைவெளி சில நூற் றாண்டுகள் ஆயினும், இவை அனைத்தும் கடவுட் காத லுணர்ச்சியை ஒரே வகையாக உணர்த்துதலும், சங்க காலத்துப் பாட்டுக்களின் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டிருத்தலும் காணலாம். மாறுதல் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் உணர்ச் சிக்கும் கற்பனைக்கும் பாட்டுவடிவம் தரும்போது, அதற்கு மரபுகள் அமைதல் உண்டு. முதலில் அந்த மரபுகள் எவ்வாறோ அமைவது உண்டு. மனிதன் முதல்முதலில் சட்டை அணிந்தபோது ஏதோ ஒரு முறையில் தைத்து அணிந்தது போன்றதுதான் மரபுகள் அமைந்த வரலாறு.† ஒரு முறை மரபுகள் அமைந்துவிட்ட பிறகு, அடுத்து வரும் பாட்டுக்கள் கூடிய வரையில் அந்த மரபுகளைப் போற்றி * பாரதியார், கண்ணன் பாட்டு-கண்ணன் என் காதலன்--பிரிவாற். ருமை, 2. 3. †They (the old conventions) represent to us the ways along which beauty has in the past been sought and found, and the very fact that the paths are now deserted and beauty sought no longer where they lead, may lend them a peculiar permanence. -J. L. Lowes, Convention and Revolt in Poetry, p. 54.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/200&oldid=1681871" இலிருந்து மீள்விக்கப்பட்டது