உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 197 அமைகின்றன. புதிய உணர்ச்சிகள் எழுந்து புதிய போக்கில் அமையும்போது, அந்த மரபுகளில் சிலவற்றைக் கடந்து அமைவதும் உண்டு. பெரும் புலவர்களின் நூல்கள் சிற்சில மரபுகளை மீறி அமைந்துள்ளமை காணலாம். ஆகவே, மரபுகள் பெரும்பாலும் பிற்கால இலக்கியங்களுக்கு வழி காட்டியாகவும் சிறுபான்மை ஏவலாளாகவும் இருந்துவரும். மிகப் பெரும் புலவர்க்கு அவை குற்றேவல் புரியுமளவிலேயே நிற்கின்றன. அவர்களாலேயே மரபுகள் மாறியமைகின்றன. சமுதாயத்தில் சட்டைகள் படிப்படியே மாறிவிடுதல் போலவே, அவையும் மாறிவிடுகின்றன; இலக்கிய உலகமும் அவற்றை ஏற்றுக்கொள்கின்றது.* கலைஞர் ஆற்றல் பழைய மரபுகளை விடாமல் போற்றுவது புலவர்களின் இயற்கை எனினும் இத்தகைய வேறுபாடுகள் மெல்ல மெல்ல இடம் பெற்றுத்தான் வருகின்றன. வாழ்க்கை யிலும் அறிவிலும் நேர்ந்துள்ள மாறுதல்கள், கலைஞரின் கற்பனையிலும் இடம் பெற்றுவிடுகின் ன்றன. ஆற்றல் மிக்க புலவர்கள் அவற்றிற்கு இலக்கிய வாழ்வு தருகின்றனர். ஏனெனில் கற்பனை எவ்வளவு தொலைவில் விலகிச் செல்ல முயன்றாலும் அதன் அடிப்படையில் வாழ்வின் உண்மைகள் இருந்தே தீர்கின்றன. கற்பனை எவ்வளவு உயரச் சென்று பறப்பதே ஆயினும், மக்களின் தொடர்பற்றுப் itself. அது Convention in poetry is only the costume in which emotion attires- J. L. Lowes, Convention and Revolt in Poetry, p. 32. † Conventions die through a process of sloughing off, as new and - Ibid p. 57. more vigorous life develops within them. But in the main, conventions die of being used to death. Poets of low vitality ensconce themselves like hermit-crabs, generation after generation, in the cast-off shells of their predecessors. 13 - Ibid. p. 58.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/201&oldid=1681872" இலிருந்து மீள்விக்கப்பட்டது