________________
200 இலக்கிய மரபு கட்டுப்பாடு கற்றவர் பலரும் தாம் கற்ற நூல்களின் பயிற்சியால் பழமையையே பெரிதும் நினைவில் கொண்டு வாழ்கின்றனர். பழைய இலக்கிய மரபுகளையே நினைவில் கொண்டுள்ள தால் அந்தப் பழமையில் ஊறியவராக உள்ளனர். அதனால் புதிய கலைஞர்கள் படைத்துத் தரும் இலக்கியங்களை அந்தப் பழைய மரபுகளைக் கொண்டு அளந்து காண்கின்றனர்.* வேறுபாடு கண்டதும் வெறுப்புக் கொள்கின்றனர் ; ஒதுக்கு கின்றனர். புதிய கலைஞர்களின் படைப்பு வாழ்க்கையி லிருந்து நேரே முகிழ்த்த கலை என்பதையும், அந்தக் கலை ஞர்களின் இயற்கையுணர்வே உண்மையான அளவுகருவி என்பதையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர். இயற்கை யுணர்வைப் பழைய மரபுகள் கொண்டு அளந்து கட்டுப் படுத்தல் கூடாது. இலக்கியம் பயிலாத மற்றவர்கள் இவ்வாறு குறுகிய நோக்கம் கொண்டு புதிய கலைஞர்களின் படைப்புக்களை அளப்பதில்லை ; அவர்கள் பழைய இலக்கிய மரபுகளை அறியாதது உதவி ஆகிறது; அவற்றை அறியாத காரணத்தால் தம் இயற்கையான உணர்வு கொண்டு புதிய நூல்களைக் கற்றுச் சீர்தூக்குகின்றனர்.
- The learned and the literary are so trained to judge by precedents that they often deal harder measure and narrower judgment to young aspirants, than those do, who, having no rules of criticism, judge merely by their natural instincts. Literary circles think to bind by their formal codes young and vigorous genius, whose very nature it is to defy the conventional and to achieve the unexpected.
-J. C. Shairp, Aspects of Poetry, p. 17. †To guard us against all such narrowness, it is well to remember that the world of poetry is wide, as wide as existence, that no experience of the past can lay down rules for future originality, or limit the materials which fresh minds may vivify, or predict the moulds in which they may cast their creations. - Ibid. p. 18.