உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

202 இலக்கிய மரபு அவ்வாறு செய்தலை விட்டு, பழைய நூல்களையும் அவற்றின் விதிகளையுமே போற்றி, புது நூல்களையும் அவற்றின் நெறியையும் வரவேற்காத மனநிலை எல்லா நாடு களிலும் உண்டு. இறந்த காலத்தைப் போற்றி நிகழ் காலத்தை நெகிழவிடும் இந்த மனப்பான்மை இலக்கிய வளர்ச்சிக்குப் பொருந்துவது அன்று. புதிய இலக்கியம் ஒன்று படைக்கப்படுமாயின், அது பழைய விதிகளுக்குப் பொருந்திவருகிறதா என்று ஆராய லாம். அதுமட்டும் போதாது. அந்தப் புதிய இலக்கிய அமைப்பில் உள்ள விதிகள் என்ன என்று ஆராய்ந்து போற்றல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிய காரணத் தால் உலகப் பெரு நூல்கள் பல ஒவ்வொரு காலத்தில் பழித்துத் தூற்றப்பட்டன. சேக்ஸ்பியரின் நாடகங்களும் தொடக்கத்தில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் காட்டு மிராண்டித் தன்மையானவை என்றும் கலைத்தன்மை அற்றவை என்றும் தூற்றப்பட்டனவாம். காதலரின் களவொழுக்கம் ஒரு தினைப்புனத்தில் தாடங்குவதாகப் பாடுவது பழைய தமிழிலக்கிய மரபு. இனிப் பாடுவோரும் அந்த மரபைப் போற்றுவார்கள் என எதிர்பார்க்க இடமில்லை. வாழ்வு மாறி யமைந்ததே இந்த மரபு மாறுவதற்குக் காரணம். இக்கால இலக்கியங்க ளான நாவல் சிறுகதைகளிலும் நாடகங்களிலும் காதலின் தொடக்கம் பல்வேறு வகையாக அமையக் காணலாம். காதலரின் ஊடலாகிய திணை மருதம் எனப்படும்; ஆற்றங் கரையில் வாழ்வோரின் ஒழுக்கமாகவே அது பாடப்பட்டு வந்தது.இனி அந்த மரபு நிலைக்க வழி இல்லை. ஊடல் எங்கும் நிகழ்வதாகப் பாடக் கூடும். மருத நிலத்தின் பரத் தையர் இல்லாமலே ஊடலை அமைத்துத் திருவள்ளுவர் முப்பது குறட்பாக்களில் கற்பனை விருந்து அளித்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/206&oldid=1681881" இலிருந்து மீள்விக்கப்பட்டது