________________
26 இலக்கிய மரபு பேய் இந்திரசாலம் காட்டுதல், பேய் கண்ட கனவைக் கூறு தல், பேய்கள் கண்ட நல்ல நிமித்தங்கள், பேய்கள் தம் பசி யைக் கூறுதல், மகிழ்தல், போர்க்களத்தில் பகைவர்க்குத் தீமையான நிமித்தங்கள் கூறுதல், அரசன் வெற்றி மாலை சூடும் செய்தி கூறல்,அரசனது மரபு கூறல், காளி போர்க் களத்திற்குச்சென்று காணுதல், போர்க்களத்தில் சமைத்த கூழைப் பேய்களுக்கு வார்த்தல், அரசனை வாழ்த்தல் முத லானவை பரணியில் பாடப்படும் பொருள்கள். இப் பகுதி களில் உயர்வு நவிற்சியும் பேய்களைப் பற்றிய கற்பனைகளும் மிகுதியாக அமையும். பரணி என்னும் நாள்மீன் காளிக்கு உரியதாகலின், நூலுக்கு அப்பெயர் அமைந்தது. * சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி இவ்வகையில் பழைய நூலும் சிறந்த நூலும் ஆகும். தக்கயாகப் பரணி அதற்கு அடுத் துக் கூறப்படும் சிறப்பினது. அரசரின் போர்க்களம் அல் லாதவேறு பொருள்கள் பற்றியும் மோசவதைப்பரணி பாச வதைப்பாணி முதலியன அமைந்தன. போர்க்களத்து வீரச் செயல்கள் பற்றிக் கூறும் நூலாதலின், மிடுக்கும் வன்மையுமான ஓசை இந் நூலில் மிகுதியாக அமைந்து வரும். கையறுநிலை பிரிவாற்றாத் துயரம் (புரவலன் அல்லது நண்பன் இறந்தபின் செயலற்று வருந்துதல்) பற்றிய பாட்டுக்கள் பழங்காலம் முதல் இருந்துவருகின்றன. பல
தக்கயாகப் பரணி, டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் முகவுரை. அவை "பரணி என்னும் பெயர்க் காரணம் பலவாருாகக் கூறப்படினும் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணி என்னும் நாள்மீனால் வந்த பெயர் என்பதே பொருத்தமுடையதாகத் தோற்றுகிறது."