உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாகுபாடு 27 கையறுநிலைப் பாட்டு (elegy) எனப்படும்.* புறநானூற்றில் முப்பத்தொரு பாட்டுக்கள் கையறுநிலையாகப் பாடப்பட் டவை. ஆங்கிலம் முதலான பிற மொழி இலக்கியங்களில் அவை சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. கலம்பகம் பிற்காலத்தில் கலம்பகம் என்னும் நூல்வகை ஒன்று தோன்றிச் செல்வாக்குடன் விளங்கியது. பேராசிரியர் அதை 'விருந்து' என்பதற்கு எடுத்துக்காட்டாகக் குறித்தார். அது தன் பெயர்க்கு ஏற்ப, பலவகைச் செய்யுளால் பல வகைப் பொருளும் கலந்து அமைவது ; நூறு செய்யுள் உடையது. ஒரு போகு, வெண்பா, கலித்துறை, வெண் டுறை, வஞ்சித்துறை, இன்னிசை வெண்பா, ஆசிரியப்பா, பலவகை : விருத்தம் ஆகிய பாக்கள் கலந்துவரும்.புயம், அம்மானை, ஊசல், களி (கள்ளுண்டு மயங்குதல்), மறம் (மறக்குடி மக்களின் வீரமொழி) சித்து (இரசவாதிகளின் கூற்று), கார் முதலிய காலம், மதங்கியார், வண்டு,மேகம், கைக்கிளை (ஒருதலைக் காமம்), சம்பிரதம் (மாயவித்தை), தவம்,பாண், தழை, இரங்கல் முதலான பல பொருள்கள்

  • கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்

தொல்காப்பியம், புறத்திணையியல், 24. தொல்காப்பியம், செய்யுளியல், 237, பேராசிரியர் உரை. "முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும், கலம்பகம் முதலியனவும் புதிதாகத் தாம் வேண்டியவாற்ருல் பல செய்யுளும் தொடர்ந்துவர இயற்றப்படும் விருந்து என்பதற்கு உதாரண மாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/31&oldid=1681827" இலிருந்து மீள்விக்கப்பட்டது