உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 இலக்கிய மரபு ஐவகை இதுவரையில் கண்டவை முன்னோரின் மரபை ஒட்டிய பாகுபாடுகள். அறிவியல் நெறியில் அமையும் பாகுபாடும் உண்டு. இலக்கியத்தில் உள்ள உணர்ச்சியனுபவம் ஐந்து வகைப்படும் என்றும், அவற்றை ஒட்டி இலக்கியத்தை ஐவகையாகப் பகுக்கலாம் என்றும் அறிஞர் கூறுவர். 1. தனி ஒருவரின் சொந்த அனுபவம் பற்றிய இலக் கியம் : பாடிய புலவரின் சொந்த வாழ்க்கையின் அனுபவத் திலிருந்தே இது எழுவது. புறநானூற்றிலுள்ள தன் னுணர்ச்சிப் பாட்டுக்கள் முதல், தனிப்பாடல் திரட்டில் உள்ள புலவரின் அனுபவப் பாட்டுக்கள் வரையில் உள் ளவை இவ்வகைக்கு எடுத்துக்காட்டு ஆவன. 2. மனிதனின் பொதுவான அனுபவம் பற்றிய இலக் கியம் : மனிதரின் வாழ்க்கையில் பலர்க்கும் பொதுவாக உள்ள அனுபவம் பற்றியது இது. சிலப்பதிகாரம் முதலான காவியங்களிலும், கலம்பகம் முதலான நூல்களிலும் இதனைக் காணலாம். 3. தனிமனிதர்க்கும் மற்றவர்க்கும் அல்லது சமுதாயத் திற்கும் உள்ள உறவின் அனுபவம் பற்றிய இலக்கியம் : புறநானூறு முதலான நூல்களில், புலவர் அரசரை வாழ்த் தியும் நன்றி கூறியும் பாடுவனவும், உலகை வியந்தும் வெறுத்தும் பரடுவனவும் முதலியன இவ்வகையின. 4. இயற்கையோடு அமையும் உறவின் அனுபவம் பற்றிய இலக்கியம் : இயற்கையின் அழகில் ஈடுபட்டுப் பாடு வனவும் இயற்கையை வெறுத்தும் சினந்தும் பாடுவனவும் இவ்வகையின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/34&oldid=1681810" இலிருந்து மீள்விக்கப்பட்டது