உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 இலக்கிய மரபு முதலியவற்றில் சொந்த உணர்ச்சி இல்லை என்பது கருத்து அன்று; குறைவாக உள்ளது என்பதே கருத்தாகும்; ஆகவே அவை ஒன்றாப் பாட்டுக்கள (objective poetry) எனப்படும். புறநானூற்றில் உள்ள பாட்டுக்களில் பெரும்பான்மை யானவை பாடிய புலவரின் சொந்த உணர்ச்சியைப் பற்றி யனவே. அவ்வையார், கபிலர் போன்ற புலவர்பெருமக்கள் தம் உள்ளத்து உணர்ச்சிகளையே பாடியுள்ளமையால், அவை ஒன்றிய பாட்டுக்கள் ஆகும். நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவ சக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப் போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் தசையினைத் தீச்சுடினும்- சிவ சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன் அசைவறு மதிகேட்டேன்- இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ? * இவை தன்னுணர்ச்சிப் பாட்டுக்கள் (lyric); பாரதியார் தம்முடைய உணர்ச்சிகளையே வெளியிட்டவை; ஆகவே பாரதியார் பாடல்கள், நல்லதோர் வீணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/36&oldid=1681801" இலிருந்து மீள்விக்கப்பட்டது