பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

இங்கு ஆசிரியர், "பிறர்படும் துன்பத்தைக் கண்டால் தமிழர்கள் பொறுக்கமாட்டார்கள் ; ஓடோடியும் சென்று உதவுவார்கள் ; இவ்வாறு பிறர் துன்புறுங்கால் இரக்கம் காட்டுதலே அழியாத செல்வமாகும் ; இதனை விடுத்து அதட்டிப் பேசுதலும், விரைந்து செல்லும் ஊர்திகளில் செல்லுதலும். நிலைத்த செல்வம் அன்று. ஒருவன் செய்த செயலின் நல்ல பயனையே சான்றோர் செல்வம் என்று கூறுவர்" என்று பிற துன்பம் களைதலே மனிதத்தன்மை ஆகும் என்று கூறியுள்ளது சிந்தனைக்குரியதாகும்.

   பண்டைத் தமிழ்மக்களின் பண்பாட்டையும் பழக்க, வழக்கங்களையும் இந்நூலிலே பரக்கக் காணலாம். இந்நூலின் துணை கொண்டு பின்வரும் பண்டை வழக்கங்களை நாம் அறியலாம்.

க. இடையன் எருமைபின் முதுகிலேறிச் செல்லுதல். உ. பிரிவுத் துன்பத்தினுல் வருந்தும் தலைவி தலைவன் வரும் நாளைச் சுவரில் கோடிட்டு எண்ணுதல்.

ங. தினைப் புனத்தில் மகளிர் கிளி ஓட்டுதல். ச. காலால் உதைத்துப் பந்து விளையாடுதல். ரு. காதலர் வரவைப் பல்லி உணர்த்துவதாகக் கருதுதல்.

இவை போன்ற இன்னும் பல பண்டைய வழக்கங்கள் இந் நூலில் நன்கு கூறப்பட்டுள்ளன.

குறுந்தொகை

    குறுகிய பாடல்களின் தொகுப்பே இந்நூல். இது ஆறடிச் சிற்றெல்லையையும், எட்டடிப் பேரெல்லையையும் உடையது; நானுாற்றிரண்டு பாடல்களைக் கொண்டது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியுள்ளார். பத்துப் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. பூரிக்கோ என்பவன் இந்நூலை நமக்குத்