பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91 ஐங்குறுநூறு

    ஐங்குறுநூறு திணை ஒழுக்கங்களை நிரலே நூறு பாடல் களால் கூறுவதாகும். ஒவ்வொரு பகுதியும், பத்துப் பாடல்கள் அடங்கிய பத்துச் சிறு பகுதிகளை உடையது. இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னர் பத்துப் பத்தாகக் கிள்ளைப் பத்து, மஞ்ஞைப் பத்து முதலிய தலைப்புக்களாகப் பிரித்திருப்பது தொகுத்த ஆசிரியரின் கூர்த்த மதியினைப் புலப்படுத்தும். இந்நால் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறடிப் பேரெல்லையையும் உடையது. சிவபெருமானைப் பற்றிய இந் நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். இந்நூல் அகவல் பாக்களால் ஆனது. ஐந்திணைகளையும் பாடியவர்கள் இன்னார் என்பதை.

"மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங் குறு நrறு" என்ற வெண்பா எடுத்துக் கூறும். இந்நூலிற் காணும் பாடல்கள் அளவிற் சிறியவையெனினும் அரிய இலக்கியச் சுவை நிறைந்த பாடல்களாகும்; எளிதிற் பொருள் விளங்கக் கூடியன; படிப்பதற்கு இனிமையானவை. நாட்டிலே வறுமைப் பிணி இல்லாதிருக்க வளம் பல சுரக்க வேண்டும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அன்பினை அடிப்படையாகக் கொண்ட இல்லறம் சிறக்க வேண்டும். மக்கள் பசியும் பிணியும் இன்றி வளமாக வாழ வேண்டும். இவை நம் முன்னோரது வாழ்க்கைக் குறிக்கோள்களாகும். அவற்றைப் பின்வரும் ஐங்குறுநூற்றுப் பாடல் வரிகளால் அறியலாம்.