பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96

நூல் முதலில் எழுபது பாடல்களாலானது என்று கூறப்படுகிறது. இந்நூல் சொற்கவை, பொருட்சுவை வாய்ந்தவை. இயற்கை வருணனைகள் நிறைந்தது. பன்னுாலும் பயின்ற பரிமேலழகர் இதற்கு உரை எழுதி உள்ளார். பொதுவாகக் கூறின் ஓர் ஊரின் சிறப்பைப் பாட வந்ததே பரிபாடல் எனலாம். மேலும் இந்நூலின் துணை கொண்டு நம் முன்னோர் கொண்டிருந்த கடவுளைப் பற்றிய சிறந்த கருத்துக்களை அறிய முடிகின்றது.

“தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநி
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ
வேதத்து மறைநீ பூதத்து முதலு நீ
வெஞ்சுடர் ஒளியுந் திங்களுள் அவரியும் நீ
அனைத்தும்நீ அனைத்தின் உட் பொருளும்நீ ஆதலின்
உறைவும் உறைவதும் இலேயே உண்மையு
மறவியில் சிறப்பின் மாயமா ரனையை”

என்று கடவுளியலைப் பற்றிக் கூறும் பகுதியும்,

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீறுார் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும் பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே”

என்று மதுரை நகர்ச் சிறப்பினைப் பற்றிக் கூறும் பகுதியும் படித்து இன்புறுதற்குரியனவாகும். மதுரை நகரைப் பற்றி: கூறியிருக்கும் பகுதியில், திருமாலின் திருவுந்தித் தெய்வத்