பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செறிவும், நூலக வல்லார்க்குரிய அணுகுமுறைச் சிறப்பும் இந்நூல் முழுவதிலும் இழைந்திருக்கக் காணலாம். புரிந்த ஒன்றைக் கொண்டு புரியாத ஒன்றை விளக்க வேண்டுமென்பது தருக்க நூலின் கோட்பாடாகும். அக் கோட்பாட்டைக் கையாள்வதில் இந்நூலாசிரியர் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளார்கள். எளிமையாகப் புரியும் தன்மையதான இன்றைய புதின உலகத்திற்கு அறிமுகம் செய்து படிப்படியாகக் காலத்தைப் பின்னோக்கி இழுத்து முடிவில் சங்க காலச் சரக்கறைக்குள் நம்மை நிறுத்தி இறவா இலக்கிய இன்பத்தைத் துய்க்க வைத்திருக்கின்றார்கள். முதற் கட்டுரை இந்நூலாசிரியருக்கு உற்றுழி உதவி நின்ற இலக்கிய உலகின் இணையற்ற விடி வெள்ளியாய் விளங்கிய முனைவர் மு. வ. அவர்கட்கு வழங்கப்பட்டுள்ள நன்றிப் படையல் என நான் கருதுகின்றேன். அக்கட்டுரை யின் புதின உலகத்தின் புரட்சி எழுத்தாளரான மு.வ. அவர் களின் புதினங்களைக் காய்தல் உவத்தலின்றி ஆய்வதின் மூலம் புதின இலக்கியத்திற்கு நல்லிலக்கணம் காட்டிச் சென்றுள்ளார்கள். குறவஞ்சி நாடகத் தமிழின் நயத்தை நன்முறையில் எடுத்துக் காட்டுவது இரண்டாம் கட்டுரை யாகும். குற்றாலக் குறவஞ்சியின் கூறுபாடுகள் குறைவின்றி நிறை விளக்கம் செய்யப்பட்டுள்ளன. மூன்றுவது கட்டுரைத் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களின் செந்தமிழ் நடை யினை நமக்குக் காட்டி நிற்கும் தனித் தமிழ்ச் சுரங்கமாகும். எழுத்து நடை எங்ஙனம் அமைதல் வேண்டும் என்ற வரை பறையும் ஆங்காங்கே சுட்டப்படுகின்றது. நான்காவது கட்டுரை நற்றமிழ்க் காப்பியங்களை அளவுடனும் அறுபடாத சுவையுடனும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. வானம் மாறினும் வண்மையின் மாறாப் பாரி பற்றிய கட்டுரை அருந்தமிழ் ஆய்வில் தோய்வார்க்கு நல்விருந்தாகும். பாரி முடிவு பற்றி இதுகாறும் ஒரு முடிவிற்கு வரமுடியாதிருக்கும் தமிழ்ப் புலவர்கட்கு அவன் முடிவு பற்றி ஆசிரியர் தரும்