பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

97

தாமரையை ஒத்துத் திகழும் மதுரை மாநகரத்தே நிரலாக அமைந்துள்ள வீதிகள் அத்தாமரையின் அகவிதழ்கள் போன்றன என்றும், அவ்விதிகள் சூழ நடுவண் அமைந்துள்ள பாண்டிய மன்னனது மாளிகை அத்தாமரை மலரின் பொகுட்டை ஒக்கும் என்றும், அத் நகரத்தே வாழும் மக்கள் அத்தாமரையினிடத்துச் செறிந்து காணும் நறுமணப் பூந்துகளை ஒப்பர் என்றும். அந்நகரத்திற்கு வரும் பரிசிலரும் பிறரும் அப்பூவை வந்து மொய்க்கும் தேன் வண்டுகளை ஒப்பர் என்றும் உவமித்திருப்பது உள்ளத்தை அள்ளுவதாய் உள்ளது.

பண்டைத் தமிழ் மக்களின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்தையும் அறிவதற்கு இந் நூல் பெரிதும் உதவுகின்றது. இன்று வழக்கற்றுப் போன சொல் முடிவுகள் பலவற்றை இந்நூலிலே நாம் காணலாம். பண்டு நம்மன்னர்கள் நாட்டைக் கண்ணும் கருத்துமாகக் காத்தோம்பினர் என்பதை,

 "அறின்கோல் செம்மையின் நாளின் நாளின் நாடு தொழுதேத்த,
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி நோயிலை
ஆகியர் நீயே"

என்ற பாடலின் மூலம் நாம் அறியலாம்.

கலித்தொகை கலித்தொகை என்னும் நூல் குடும்ப வாழ்க்கையின் போக்கினைச் சித்திரித்துக் காட்டுவதற்கு எழுந்ததாகும். மக்கள் வாழ்க்கையின் உயர்ந்த பண்புகளும், ஒரொரு தாழ்ந்த பண்புகளும் இதன் கண் இடம் பெற்றுள்ளன, இது அகப்பொருள் துதலியதாயினும், பாடல் வகையால் ஏனே அகப்பொருள் நூல்களினின்றும் வேறுபட்டதாகும். இதனைத்மு.வ.-7