பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

உதைத்துக் கலைத்தும், பின்புறமாக வந்து நின்று நம் தலையில் சூடியிருக்கும் மாலையை அறுத்தும், நாம் விளையாடும் பந்தைத் தூக்கிச் சென்றும், இவ்வாறு நாம் வருந்தும்படி குறும்புத்தனம் செய்த அந்தச் சிறிய பட்டிப் பையனைத் தான் நீ அறிவாயே? முன்னுெருநாள் செய்த குறும்பினைக் கேட்பாயாக! நானும் என் அன்னையும் வீட்டினுள் இருந்தோம். அது கால் அவன் வந்து உண்ணும் நீர் வேண்டும் என் முன். என் அன்னை அவனுக்குப் பொன் தகட்டாலே செய்த செம்பிலே குடிநீரைக் கொண்டு போகும்படி என்னைப் பணித்தாள். நானும் வந்திருப்பவன் இன்னன் என்று அறியாது நீர் கொண்டு சென்றேன். என்னைக் கண்ட அவன் பெருமகிழ் வுற்று வளையலை அணிந்த என் முன்கையைப் பற்றி அழுத்தினேன். நான் எதிர்பாராத இச்செயலால் "அம்மா இவன் செய்வதைப் பார்’ எனக் கூச்சலிட்டேன். அன்னையும் அலறிப் புடைத்துக்கொண்டு அங்கு வந்தாள். உடனே நான் நிகழ்ந்ததை மறைக்க எண்ணி அவன் நீர் விக்கினன் என் றேன். அதனைக் கேட்ட அன்னே அவன்மீது பரிவு கொண்டு, நீர் விக்காதபடி அவன் முதுகைத் கடவிக் கொடுத்தாள். ஆனல் அக்கள்வன் மகனே என்னைக் கொல்லுகின்றவனைப் போலே தன் கடைக் கண்ணுல் பார்த்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்". இதனைப் புலவர்,

 சுடர்த் தொடீஇ கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலிற்சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி;மேல் ஒர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே,
உண்னு நீர் வேட்டேன் எனவந்தாற்கு;அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய் !
உண்ணு நீர் ஊட்டிவா என்ருள் ; என யானும்
தன்னை யறியாது சென்றேன், மற்று என்ன
வளைமுன் கைபற்றி நலியத், தெருமந்திட்டு,
அன்னுய் இவன் ஒருவன் செய்தது காண்! என்றேன்