பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

பாடல்கள் யாவும் மிகவும் சுவையுள்ளனவாகும். குறிஞ்சி நில வொழுக்கமாகிய களவு மனத்தின் அடிப்படையான முதல் சந்திப்பைப் பற்றி இந்நூலில் காணும் பாடலொன்று,

 "மலி பூஞ் சாரல் என்தோழி மாரோடு
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
புலிபுலி யென்னும் பூசல் தோன்ற;
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆபிதழ்
ஊசிபோகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்.
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒரு கன தெரிந்துகொண்டு
யாதோ மாற்றம்; மாதிறம் படர்என,
வினவி நிற்றந் தோனே; அவன் கண்டு
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி
நாணி நின்றெனம் ஆகப் பேணி ஐவகை வகுத்த கூந்தல், ஆய்நுதல்
மையிர் ஓதி மடவீர் ! தும் வாய்ப் பொய்யும் உளவோ என்றனன்; பையெனப் பரிமுடுகு தவிர்த்ததேரன் எதிர் மறுத்து, நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்ருேன் மன்றஅக் குன்று கிழவோனே"

என்று தோழி செவிலித்தாய்க்குக் கூறுவது போலக் காணப் படுகின்றது. இதன் பொருள் வருமாறு : 'பூக்கள் நிறைந்த மலைச் சாரலிலே நாங்கள் வேங்கை மலர் கொய்வ தற்காகப் போனுேம். புலி, புலி' என்று வேடிக்கையாகக் கூறி ஆரவாரம் செய்து கொண்டே மலர் கொய்து கொண்டிருந்தோம். அதுகால் மாலையை அணிந்தவனும் கையிலே அம்பு தொடுத்த வில்லை ஏந்தியவனுமாகிய விர ளுெருவன் அங்கு வந்து எங்கே புலி ? அது எத்திசையில் சென்றது ?" என்று கேட்டனன். நாங்கள் நாணத்தில்ை வாய் திறவாது கண் புதைத்து நின்ருேம். அதனேக் கண்ட அவன் உங்கள் வாயினுல் பொய் சொல்வதும் உண்டோ?"