பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

அரசனையும் தம் ஆணையின்கீழ் ஆடச் செய்த ஞானியர்களின் உண்மைக்கும், கற்புடை மடந்தையர் கனையெரி புக்க காலத்து உளமுருகிக் கனிந்த உள்ளன்பிற்கும் அறிகுறியாகக் கிடைத்த அன்னுர்தம் பாக்களைத் திரட்டுதலே தங்களுக்குரிய உயரிய இலக்கியமாக அமையும் என்றெண்ணி, வாழ்க் கையைச் சீய்த்து வளமிக்க உண்மைகளைத் தொகுத்து வைத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டதே புறநானுாறு என்ற புறப்பொருள் நூலாயிற்று. இதன் கண் வாழ்க்கையின் எல்லாவிதக் கூறுபாடுகளும் பாடல்களாக மிளிர்கின்றன. உலக முழுவதும் ஒருங்கே ஒப்பற்ற அன்பிற் கலந்து வாழ, அக்காலப் புலவன் அகங்கனிந்து பாடிய ஆன்மநேய ஒருமை இதன் மூலம் ஊடுருவிப் பாய்ந்து இதற்கு உயிர் நாடியாக விளங்குகிறது. எனவே உலக முழுமைக்கும் உரியதாகப் பரந்து பாய்ந்த தமிழ் மக்களின் உயரிய நோக்கத்திற்குப் புறநாலாறு ஒர் அறிகுறியாகும். புறநானூற்றுப் பாடல் களைப் பாடிய புலவர்கள் நூற்றைம்பத்தேழுக்கு மேற்பட்ட வர்கள். நூற்றிருபத்தொன்பது பேர் பாட்டுடைத் தவைர் கள். இப்பொழுதுள்ள முன் னுாற்றுத் தொண்ணுாற்றெட்டுப் பாடல்களில் பதின்நான்கு பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரிவதற்கில்லை. சுருங்கக் கூறின், புறநானுாறு தமிழர்தம் இலக்கியக் கருவூலமாகும்; தமிழ் இலக்கியத்தின் அணையா விளக்காகும். பண்டைத் தமிழர்தம் பண்பாட்டுச் சேமிப்பு என்று கூறினும் அது மிகையன்று, தமிழர் பெருமையை, வரலாற்றை, பண்பாட்டை இத்தரணிக்கு எடுத்துக் காட்டும் ஒரு தலை சிறந்த நூலாகும், பின்வரும் புற நானுாற்றுக் கருத்துக்கள் இவ்வுண்மையினை நன்கு எடுத்துக் காட்டும்.

"எல்லா ஊர்களும் எம்முடைய சொந்த ஊர்கள்: எல்லா மக்களும் எம்முடைய உறவினர்கள் நன்மையும் தீமையும் பிறரால் வருவன அல்ல; அவைபோலத்தான் இன்புறுவதும் துன்புறுவதுங்கூட; சாவு புதியதன்று. அது இயற்கையே; எனவே இவ்வுலக வாழ்வு இனிமையானது