பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

என மகிழவும் மாட்டோம்; கொடிய சினத்தால் துன்பமுடை யது என்று எண்ணவும் மாட்டோம்." இவைகளே தமிழர் தம் வாழ்க்கைக் குறிக்கோள்களாகும். இதனைக் கணியன் பூங்குன்றஞர் என்னும் புலவர்,

 "யாதும் ஊரே, யாவரும் கேளிர், திதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்ருேர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே!முனிவின்
இன்னது என்றலும் இலமே”

என்று திறம்படக் கூறியுள்ளார். "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழன் கண்ட உண்மை உலகெங்கணும் பரவுமாகில் உலகம் நிலைத்து வாழ முடியும்: போர்வெறி ஒழியும்; இனவெறி மறையும், சாதி வெறி நீங்கும். உலகெங்கனும் அமைதி நிலவும்; அன்பு தழைக்கும் அறம் வளரும்: "இன்பம்! இன்பம்! எங்கும் இன்பமே!'என்று எண்ணி இறும்பூதெய்தலாம்.

அரசியலின் சிறப்பையும், அரசனுடைய கடமையையும் பற்றி மோசிகீரனர் என்னும் புலவர்.

<poem> "நெல்லும் உயிர்அன்றே, நீரும் உயிர் அன்றே. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் ; அதனால், யான் உயிர் என்பது அறிகை வேல் மிகுதானை வேந்தற்குக் கடனே"

என்று நமது சிந்தையைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் பாடியுள்ளார். நான்தான் இவ்வுலகத்திற்கு உயிர் என்று பைந்தமிழ் நாட்டை ஆண்ட ஒவ்வொரு மன்னனும் எண் னிய காரணத்தினுல்தான் பண்டு நம் பைந்தமிழ் நாடு ஏற்றமும் எழிலும் கொண்டு இன்பப் பெட்டகமாய் விளங்கியது. மேலும் அரசாட்சியின் வெற்றி சிறந்த அறநெறியைத்தான்