பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiw செய்திகள் மேலும் சிந்தனைத் திறனை வளர்ப்பனவாக உள்ளன. எட்டுத் தொகை பற்றிய கட்டுரை நமது நெஞ்சைத் தொட்டுப் பார்க்கும் நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டுகின்றது. பட்டினப்பாலை பற்றிய இறுதிக் கட்டுரையில் அந்நூலின் பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுவதோடு நூல் நுவலும் செய்திகளை நிரல்படக் கூறியிருக்கும் ஆசிரிய ரின் திறன் எண்ணிப் போற்றுதற்குரியது. அனைத்திற்கும் மேலாக ஆசிரியரின் நடை இழுமென ஒலிக்கும் விழுமிய நடையாகும். சுருங்கக் கூறின், இம்மலரின் ஒவ்வொரு இதழும் மண முடையது; அன்றலர்ந்து தேன் பிலிற்றும் வாடாத் தன்மையது. இலக்கிய வரலாற்றைப் பாடமாகக் கற்கும் மாணவர் கட்குக் கிடைத்த கருவூலமாகும். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு பயன்படுத்த வேண்டும் என்பதே எம் போன்றோரின் இதய விழைவாகும். ஆசிரியரின் தமிழ்த்தொண்டு மேலும் சிறக்க, தமிழ் அன்னையை வாழ்த்துகின் றேன். கோவில்பட்டி, 24-7-75. }

  (ஒம்) அ.சங்கரவள்ளிநாயகம்