பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107 7. பட்டினப்பாலை பத்துப்பாட்டில் பட்டினப்பாலை பவளமும் முத்தும் கொழித்த பாண்டி வளநாட்டை ஆண்ட பண்புடைப் பாண்டிய மன்னர்கள். முச்சங்கங்கள் கூட்டி முத்த மிழையும் வளர்த்தனர் என்பது நாடறிந்த செய்தியாகும். சந்தனப் பொதியநாட்டில் சங்ககாலத்திலே சான்றோர் பலர் பாட்டியற்றி, பாரோர் வியக்கும் வண்ணம் பைந்தமிழை வளர்த்தனர். சங்கப் புலவர்கள் பாடியபாக்கள் பிற்காலத்தில் , பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரு தொகைநூல்களாகத் தொகுக்கப்பட்டன. பத்துப்பாட்டு என்னும் தொகை நூலில் பத்து நூல்கள் அடங்கியுள்ளன. அவையாவன : தித்திக்கும் நீந்தமிழால் திருமுருகாற்றுப்படை, பொன்ச் சிறப்புடைய பொருநராற்றுப்படை, செந்தமிழ் நலஞ்சான்ற சிறுபாணாற்றுப்படை பெறற்கு அருந்தொல் சீர்ப் பெரும்பாணாற்றுப் படை, முல்லேசான்ற முல்லைப்பாட்டு, மதுரத்தமிழால் ஆய மதுரைக்காஞ்சி, நெடுஞ்செழியன் புகழ்பாடும் நெடுநல்வாடை, குறிஞ்சியின் குன்று அழகைக் கூறும் குறிஞ்சிப் பாட்டு, பட்டினத்தின் பாங்கினைக் கூறும் பட்டினப்பாலை, மலையின் கண் பிறந்த ஒசையின் மாண்பினைக் கூறும் மபைடுகடாம். இந்நூல்களே, 'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பாலை கடாத் தொடும் பத்து’’ என்று பாடலொன்று தொகுத்துக் கூறுகின்றது.