பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 பட்டினப்பாலை பாடிய பாவலர் பைந்தமிழ்ப் புலவர் போற்றும் பத்துப்பாட்டில் ஒன்பதாவது பாட்டாக விளங்கும் பட்டினப் பாலையைப் பாடியவர் கன்னித் தமிழ் வளர்த்த கடியலூர் உருத்தி ரங்கண்ணனார் ஆவார். பத்துப்பாட்டில் காணும் மற்றொரு தூனாலாகிய பெரும்பாணாற்றுப் படை ஆசிரியரும் இவரே ஆவார். தனக்குப் பாமாலையாக பட்டினப்பாலையை வனந்த இப்பாவலரை களிறனைய கரிகாற்பெருவளத்தான். பாட்டுடைத் தலைவன் என்ற முறையில் பதினாறு நூறாயிரம் பொன்னைப் பரிசாக அளித்துப்பாராட்டினன். இதனை, "தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன் பத்தொடாறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப்பாலை கொண்டதும்’ என்று கவிநயமுடைய கலிங்கத்துப் பரணியும்,

  • பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு கோடி பசும்பொன் கொடுத்தோனும்’

என்று சங்கரசோழன் உலாவும், 'பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டாற் பதினாறு கோடி பொன் கொண்டது நின்கொற்றமே” என்று தமிழ்விடு தூதும் சுட்டிக் காட்டியுள்ளன. வஞ்சி நெடும்பாட்டு பட்டினப்பாலை 301 அடிகளை உடையது. இது பெரும் பாலும் வஞ்சியடிகளால் அமைந்து, ஆசிரிய அடிகளால் முடிகிறது.

வஞ்சி நெடும் பாட்டெனவும் இது வழங்கப்பெறுகிறது. உச்சி மேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் இதற்கு