பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109 நல்லதொரு உரை வகுத்துள்ளார். அத்துடன் அவர் இப் பாட்டினை வஞ்சிப்பாவின் இடையளவிற்கு எல்லையாகக் காட்டுவார். பட்டினப்பாலை என்பது, பட்டினம், பாலை ஆகிய இரு சொற்களைக் கொண்ட ஒரு தொடராகும். காவிரிக்குக் கரை யமைத்து, கன்னித்தமிழ் வளர்த்த சோழப் பெருவேந்தன் கரிகாலனது தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தை இது சிறப்பித்துக் கூறுகின்றது. மேலும் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய அகனைந்தினை ஒழுக்கத்தில் இடைநின்ற பாலே ஒரு முக்கத்தின் உயர்வினை இது சுட்டிக்காட்டுகின்றது. எனவேதான் இப்பாட்டிற்குப் பட்டினப்பாலை என்று ஆசிரியர் பெயர் சூட்டினார். அதாவது, ஆசிரியர் இருபொருள்களைப் பற்றி இந்நூலின் பாடக் கருதினர். ஒன்று புறத்தே கட் லனுக்கு உருவாக தோன்றும் பட்டினத்தின் பாங்கு : மற் றொன்று அகத்தே உயிர் உணர்விற்கு அருவாய்த் தோன்றும் பாலை ஒழுக்கம். என வேதான் இவ்விரு பொருள் களையும் நுட்பமாக இணைத்து ஆசிரியர் இதற்குப் பட்டினப் பாலை என்னும் பெயர் சூட்டினார் போலும் ! மற்றொரு சிறப்பும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். வசையில் புகழ் வயங்குவெண் ፡ என்று நூர்க்கத் தொடங்கி, இரு நாற்றுப்பதினெட்டு வரிகளில் பட்டின ஒன் சிறப்பினைச் சித்திரிக்கும் முகத்தான் ஆசிரியர் முதலில் படிப்போர்தம் மனத்தை அறிவை ஒர் ஒழுங்குறச் செய்து விளக்கி உள்ளார். அதன் பின்னர் அவ்வறிவின் மேம்பட்ட அகவுணர்வை, 'வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே'