பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 என்று இரு அடிகளில் அவர் விளக்கி உள்ளார். அத்துடன் அவர் நின்று விடவில்லை. இடையிற் கருக்கொண்ட அக கருப்பொருளை, ‘'வேலினும் வெப்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் றோளே’ என்னும் நூலின் இறுதி அடிகளோடு ஆசிரியர் இனத்து , காட்டியிருப்பது ஈடும் இணையு மற்றதாகும். நல்லிசைப் புலவரது சீரிய செயல் ஒரு வழிப்பட , சுற்றித் திரியும் நமது அறிவை ஒர் ஒழுங்குப்படுத்தி, நமக்குள் சிறந்த உணர்வு ஊட்டலே ஆகும். அதாவது உண்மை தன்மையினே நமது அறிவுக்கு விளங்குமாறு அவர்கள் செப்ப வேண்டும். பட்டினப்பாலை பாடிய பாவலரும் இதனை கொண்டு நமது அறிவினை அங்கு மிங்கும் செல்லாது தடுத்தற்பொருட்டு, புறப்பொருள்களுள் சிறந்த காவிரிப்பூம்பட்டினத்தை-அதன் வளத்தை - அதன் எழிலை - அதன் சிறப்பை-நமது அறிவு விரும்பிக் கொள்ளும் வண்ணம் கவினுற எடுத்துக் காட்டியுள்ளார். பொதுவாக வரம்பின், பல உலகியற் பொருள்களிடத்துச் சென்று, பழக்கப்பட்ட அறிவினை ஒரு சிறந்த பொருளினை நாம் பற்றுமாறு செய்யின், அது அடங்கி, ஒடுங்கி, ஒரளவு ஆற்றலுடன் விளங்கும். அதுகால், ஒரு பொருளைப் பற்றிக் கொள்ளும். இதேநிலையில்தான் ஆசிரியர், புறப்பொருளை முதலில் கூறி, நமது அறிவை இழுத்துச் சென்று, அடுத்து அகப்பொருள் ஒழுக்கத்தை, வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே' எனது இரண்டடிகளில் சுருக்கிக் கூறி அதனிடத்துப் பதிய வைத்துள்ளார். இங்கு கானும் ஆசிரியரது உளவியல் திறன்