பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 பாலை என்னும் அகவொழுக்கத்தோடு தொடர்புடை புறவொழுக்கம் வாகையாகும் இதனை, வாகைதானே பாலையது புறனே" என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் நாம் அறியலாம். வாகை என்பது, ஒருவரின் திறத்தை, சிறப்பை விளக்குதல் ஆகும். பாலை என்பது, தலைமகன் தலைவியிடத்து வைக் துள்ள அன்பினை வென்று, பொருள் ஈட்டுவதற்காகப் பிறி தோரிடத்திற்குச் செல்வதை உணர்த்துவது ஆகும். எனவே அகத்தே நிகழும் அன்பை வெற்றி காணும் பாலையும் புறத்தே நிகழும் பகைவர் ஆற்றலை வெற்றி காணும் இதனை தம்முள் ஒப்புமையுடையனவாக விளங்குவதை நாம் காண இயலும். அத்துடன் பாலை ஒழுக்கத்தைப் பேசும் இந் நூலின்கண் கரிகாற்சோழன் தனது பகைவர் அனைவரையும் அடியோடு அழித்து, வெற்றி வேந்ததைச் செங்கோல் செலுத் திய வாகை என்ற புறவொழுக்கம் கூறப்பட்டிருப்பது இங்கு எண்ணுவதற்கு உரியது ஆகும். இவ்வாறு பாலையின் பண்பும், வாகையின் ஒழுக்கமும் பொருத்தமாக இப்பாடலில் இணைக்கப்பட்டு விளக்கப்பட்டிருப்பதால், அதாவது புறமும் அகமும் இயைபுபட எடுத்தோதப் பட்டிருப்பதால், இப்பாட்டிற்குப் பட்டினப்பாலை என்னும் பெயர் அமைந்துள்ளது முற்றிலும் பொருந்துவதாகும். நூலில் பேசப்படும் பொருள்கள் ஆற்றுச் சிறப்பு (காவிரி), நாட்டுச் சிறப்பு (சோழ நாடு), நகரச் சிறப்பு (காவிரிபூம் பட்டினம்)-புறநகர்ச் சிறப்பு. காவிரித்துறையின் காட்சி, செம்படவரின் வாழ்க்கை, அங் காடியின் சிறப்பு. வணிகவளம், மக்களது பண்பட்ட வாழ்க்கை- நகரத் தலைவனது சிறப்பு(கரிகால் வளத்தான்)பெருமை, விரம், கொடை, ஆற்றிய நாட்டுப்பணிகள்-ஆகியன இப்பாட்டில் பேசப்படும் பொருள்கள் ஆகும்,