பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

சோழநாட்டின் செவிலி சோழநாடு சோறுடைத்து' என்பதொன்றே சோழ நாடு எஞ்ஞா வளம் படைத்த நஞ்சை சூழ் நாடென்பதை இனிது விளக்கும். இத்தகைய வளமார்ந்த சோழநாடு முதலில் ஆசிரியரால் காட்டப் பெறுகின்றது. சோழநாட்டின் வளத்திற்குக் காரணம் அதற்கு அருள் சுரந்து அதனைப் புரக்கும் செவிலியாகிய காவிரி ஆறே ஆகும். வெண்மீன் தான் இருப்பதற்குரிய வடதிசையில் இருக்காது, மாறாக வடக்கேயிருந்து தெற்கே சென்றாலும், தானே பாடித் திரியும் மழைத் துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடி வருந்தும்படி வான் பொய்த்துவிட்டாலும், அக்காவிரியாறு தான் பொய்யாது மேற்கே உள்ள குடகு மலையில் பிறந்து, கிழக்குக் கடலிலே கலக்கும். இதனைப் பாட்டின் பாவலர், "வசையில் புகழ் வயங்குவெண்மீன் றிசை திரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி வான் பொய்ப்ப்பினுந் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி' என்று பாராட்டி உள்ளார். சோழநாட்டின் வளம் வற்றாத காவிரி பின் புனல் பரந்து எங்கும் பொன் கொழிக்கும். கழனிகளில் கரும் பு செழித்து ஓங்கி வளரும். அக் கரும்பின மக்கள் வெட்டிச்சாறு பிழிந்து ஆலைகளில் காய்ச்சுவர். கரும்பு ஆலைகளினின்று எழும் புகை நெய்தற் பூக்களை வாடச் செய்யும், கழனிகளிலே விளைந்திருக்கும் செந்நெற் கதிர்களைமேயும் பெரிய வயிற்றையுடைய எருமையின் கன்றுகள் மு. வ.- 8