பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 வயிறாரத் தின்று நெற்களஞ்சியங்களின் நிழலிலே இனிமையாக உறங்கும். இதனே, 'காய்ச் செந்நெற் கதிரருந்தி மோட்டெருமை முழுக்குழவி கூட்டுநிழற் றுயில் வதியும்' என்று ஆசிரியர் நகைச்சுவை ததும்பும் வண்ணம் எடுத்துக் காட்டியுள்ளார். கூறியவாறு குறையாத வளமுடைய குறும் பல்லூர்களைக் கொண்டது சோழ நாடு. அவ்வூர்களிலுள்ள கழனிகளில் : குலையினையுடைய தெங்கினையும், கலைவாழை களையும், காய்க் கமுகினையும், மனநாறும் மஞ்சளினைபும், இனமான மாமரங்களினையும், குலைகளையுடைய பனை பினையும், அடிபரந்த சேம்பினையும், முளை இஞ்சியினையும் செழிக்கக் காணலாம். பட்டினத்தின் பாங்கு செல்வ வளம் நாட்டின் நலத்தினைக் கூறிய நல்லாசிரியர் அடுத்து பட்டினத்தின் பாங்கினைக் கூறியுள்ளார். முதலில் பட்டினத் தின் பாக்கங்களில் வாழும் மக்களின் செல்வச் சிறப்பு ஆசிரியரால் கூறப்பட்டுள்ளது. ஒளிதுதலினையும் மட நோக்கினையும் பொன்னால் செய்த பூனினையும் உடைய மகளிர் செல்வம் அகன்ற மனையினது முற்றத்தில் உலருகின்ற நெல்லைத் தின்னுங் கோழியை பொன்னால் செய்த மகரக் குழையை எறிந்து ஒட்டினர். அக்குழையானது பொற் பூண் அணிந்த தாளினையுடைய சிற்றூர், குதிரை பூட்டாமல் கையால் உருட்டும் மூன்று உருளைகளையுடைய சிறு தேரினது வழியிற் கிடந்து அதனை மேலே செல்லாதவாறு தடுக்கும். அத்துடன் கோழியைத் துரத்தக் குழையை அந்நாட்டு மகளிர்