பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117 குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முற்றத்தினை உடைய மாட்டுக் கொட்டில்களும், தவப் பள்ளிகளும் பட்டினமெங்கணு காணப்பட்டன. அத்துடன் முனிவர்களது வேள்விச் சாலைகள் அமைந்த சோலைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. அச்சோலைகளில் சடைமுடி தரித்த முனிவர்கள் வேள்வி செய்ததால் எழுந்த புகையை மேகம் என்று கருதிய கருங்குயிற் சேவல்கள் அதற்கு அஞ்சி அச்சோலைகளில் இருத்தலை வெறுத்துத் தம் பெடைகளோடு அவற்றை விட்டு நீங்கின. பூதங்கள் காவல் செய்யும் காளி கோட்டத்திற்குச் சென்று, அங்கு ஏற்கெனவே தங்கி இருந்த புருக்களோடு ஒர் ஒதுக்கிடத்தே தங்கின. பரதவர் குப்பம் பழமையான மரத்தினைக் கொண்ட மேடுபள்ளமான இடங்கள் பல பரதவர் குப்பங்களில் இருந்தன. அகன்ற மணல்மேடுகளில் இளைஞரும் சுற்றத்தவருமாகக் குடியிருந்த அப் பரதவர், உண்டும் ஆடியும் மகிழ்ந்தனர். கடல் இரு மீனின் சுடப்பட்ட இனிய இறைச்சியையும், வயல் ஆமை யைப் புழுக்கின இறைச்சியையும், அவர்கள் உண்டனர். மனவிலே படர்ந்த அடப்பம் பூவைத் தலையிலே சூடினர். அத்துடன் நீரில் நின்ற ஆம்பற் பூவையும் பறித்துச் சூடினர். அகன்ற இடத்தையுடைய ஊர் வெளியிடத்தே பலரும் திரண்டு நின்றனர். அவ்வாறு அவர்கள் திரண்டு நின்ற காட்சியினை, "நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோண்மீன் போல' என்று நீலநிறத்தையுடைய ஆகாயத்தே வலமாக எழுந்து திரியும் நாள்களாகிய மீன்களோடே கலந்த கோள்களாகிய மீன்கள் போல அவர்கள் குழிஇ நின்றனர் என்று ஆசிரியர் கூறியுள்ளார். அவர்கள் அவ்வாறு கூடி நின்றதற்குரிய காரணம் மன்றிலே மேழ கக்கிடாபோடே சிவலையுங்கொண்டு பொருவித்து விகளயாடுதற்காகும். அத்துடன் அவர்கள்