பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121 பட்டினப் பண்ட முற்றம் வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற் பரப்பவும் மாரி பெய்யும் பருவம் போல' பிற நாடுகளிலிருந்து சோழ நாட்டில் இறக்குமதியாகிய பொருள்களும், ஏற்றுமதியாவதற்கு அங்குக் குவிக்கப்பட்ட பொருள்களும் வரம்பில்லாமல் பண்டசாலையில் வந்து நிறைந்தன. சிறந்த பாதுகாப்பும் பெரிய காவலையும் உடைய சுங்கச் சாவடியில் இருந்த சுங்கக் காவலர், வலி மையுடைய பகைவர்களை இமையால் வருத்தும் கரிகாலனது புலி இலச்சினையைப் பொறித்து அவற்றை வெளிப் போக்கினர். அத்துடன் பண்டசாலை முன்றிலில் காணப்பட்ட பண்ட மூட்டைகளின் மீது கூரிய நகங்களையுடைய ஆண் நாய் ஆட்டுக்கிடாயோடு குதித்து விளையாடியது. இக்காட்சி மழை உலாவும் சிகரத்தையுடைய மூங்கிலையும் பக்க மலை யினையும் உடைய மலையிடத்தே உலாவும் வருடைத் தோற்றம் போல புலவருக்கு விளங்கியது. எனவே அவர், "மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போல' என்று பாடியுள்ளார். அங்காடித் தெரு அழகு அங்காடித் தெருவில் சுற்றுத் திண்ணைகளும், பல பகுதி களும், குறுவாயில் பெருவாயில்களும், இடைகழிகளும் பொருந்திய பெரிய வீடுகள் இரு மருங்கினும் இருந்தன. அவ்வீட்டுத் திண்ணைகளில் ஏறுவதற்குப் படிகள் அமைந்த ஏணிகள் சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. மேகம் தவழும் உயரிய மாடங்கள் அவ்வீடுகளை அழகு படுத்தின. சிவந்த அடிகளையும், நெருங்கிய துடைகளையும், பசும் பொன்னால் ஆகிய அணிகலன்களையும், மெல்லிய ஆடையினையும், பவளம்