பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 போன்ற மேனிவாயும், மயிலின் இயலினையும், மான்னோக்கி. னையும், கிளி மழலை வினையு மென் சாய வினையும் உடை. அழகிய பெண்கள் வீட்டுச் சாளரத்தின் அருகில் வந்து நின் றனர். ஒரு சில மகளிர் தமிழ்க் கடவுள் முருகனுக்கு வெறியாட்டு எடுத்தனர். அது கால் குழல் அகவியது; பார் முரன்றது; முழவு அதிர்ந்தது; முரசு முழங்கி யது. வீட்டும் சாளரங்களில் நின்ற மகளிர் பல மகரந்தத்தைச் சித்தும் காந்தளின் அழகிய கணுக்களிலே நிறைந்த மாட்டின் கொத்தைப் போல வளையலை அணிந்த முன் கைகளைக் கூப்பி செவ்வேளுக்கு எடுத்த வெறியாட்டினத் தொழுதனர். இவ்வாறு ஆடலு பாடலு , இசைப்பைந்தமிழ் இனிய விழாக்கள் அங்காடித் தெருக்களில் கருவில் நிகழ்த்துவ தால், அத்தெரு எப்பொழுதும் ஆரவாரம் மிக்கதாக விளங்கியது. கொடிகளின் கோலம் இல்லத்தில் உறைகின்ற தெய்வம் மகிழும்படி மலரணிக்க மனைவாசலிற் கட்டின கொடிகளும், வருகின்ற புனல் கொண்டுவந்த வெள்ளிய மணலை புடைய காட்டாற்றுக் கரையில் நின்ற அழகிய கரும்பினது ஒள்ளிய பூப்போல கடைத்தெருவிற்கு இரண்டு புறத்திலும் எடுத்த துகிம் கொடிகளும் பட்டினமெங்கும் பறந்தன. இதனை நூலாசிரியர் 'மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய மலரணி வாயிற் பலர் தொழு கொடியும் வரு புன றந்த வெண் மணற் கான்யாற் றுருகெழு கரும்பி னெண் பூப் போல மேலூன்றிய துகிற்கொடியும்' என்று கவினுறக் காட்டுகின்றார், அத்துடன் வால் அரிசிப் பலி சிதறி ஊன்றிய மஞ்சிகையிற் கவிந்த சட்டங்களின் மேலே தட்டுவைத்த வெள்ளிய கொடிகளும், பல் கேள்வித் துறை போகிய தொல் ஆனை நல்லாசிரியர் வாதிடுவதற்காகவேண்டி உயர்த்திய கொடிகளும், புகார்த்துறையில் நின்ற அசையாத