பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 வேளாண்மை புரியும் வேளாளர் பட்டினத்தில் தங்களது வேளாண்மையால் வீறு பெற்று விளங்கிய வேளாளர் கொலை கடிந்தும், களவு நீக்கியு அமரர்ப் பேணியும், ஆவுதிகளை அவரது கரப் பண்ணிபும் நல்ல பசுக்களோடு எருதுகளை ஓம்பியும், அறவோர் பேணியும், அறங்கள் பல வளர்த்தும், வறியோர்க்கு அரிசியும் கறியும் கொடுத்தும்,இவ்வாறு அறத்தொழில்கள் பலவற்றைப் புரிந்து அருள்மிகு இல்லற வாழ்க்கையை இனிதாக நடத்தி தன்னெஞ்சினராக விளங்கினர். வடு அஞ்சி வாய்மொழியும் வாணிகர் வளைந்த மேழியால் உழவுத் தொழிலைச் செய்யும் உழவரது நெடிய நுகத்திற் பொருந்திய பலகாணி போல நடுவுநிலை என்னும் பண்பினைக் கொண்டவராய் இங்கு உறையும் வாணிகப் பெருமக்கள் விளங்கினர். தம்முடைய பொருள்களையும் பிறரது பொருள்களையும் ஒப்பநாடி, வடு அஞ்சி வாய்மொழிந்து, தாங் கொள்ளுஞ் சரக்கை மிகையாகக் கொள்ளாது, தாங்கொடுக்கும் சரக்கைக் குறையக் கொடாமல், வாணிபத்தை அவர்கள் ஒழுங்காக நடத்தி உயர்ந்து விளங்கினர். அத்துடன் அவர்கள் தமக்குக் கிடைக்கும் ஊதியம் இஃது என்று வெளிப்படையாகச் சொல்லியே தம் பொருள்களை விற்றனர். இவ்வாறு நேர்மையான வழியிலே தான் அவ்வாணிகர் பொருள் திரட்டினர். இவ்வாறாகக் காவிரிப்பூம்பட்டினம் வளத்தாலும், நலத்தாலும், வாழ்வு நெறியாலும், பொருட் சிறப்பாலும் பொலிவும் உயர்வும் பெற்று விளங்கியது. - திருமாவளவனின் வேலின் வெம்மை கூர்மையான நகத்தினையும், கொடுவரியினையும் உடைய புலிக்குட்டி கூட்டினுள்ளே அடைபட்டு வளர்ந்தாற்போல