பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 125 பகைவரால் பிணிக்கப்பட்டு சிறையில் இருந்து, வீரம் வயிர மேறி வளர்ந்து, அதன் பின்னர் தன்கோட்டால் அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று தன் பெண் யானையோடு சேரும் பெருங்கை யானையைப் போன்று, பெருமையும் உரனும் கொண்ட திருமாவளவன் பகைவர் சிறையினின்றும் தப்பித், தனது ஆட்சி உரிமையைப் பெற்றான். இதனைப் பட்டினப் பாலை ஆசிரியர்,

 "கொடுவரிக் குருளை கூட்டுள் 
  வளர்ந்தாங்குப் பிறர் பிணியகத் 
  திருந்து பீடுசாழ் முற்றி யருங்கறை 
  கவியக் குத்திக் குழி கொன்று 
  பெருங்கை யானை பிடிபுக் காங்கு 
  நுண்ணிதி னுணர நாடி நண்னர் 
  செறிவுடைத் திண்காப் பேறி 
  வாழ்கழித் துருகெழு தாய 
  மூழினெய்தி"

என்று பாங்குடன் கூறியுள்ளார்,

   ஆட்சி உரிமையைப் பெற்ற அவன் தன் பகைவரை அடியோடு அழித்தற் பொருட்டு, தன் யானைப்படையோடும் குதிரைப்படையோடும் சென்று பகைவீரர்களை அழித்து, பூவையும் உழிஞையும் சூடி, முரசம் முழங்க முனைகெடச் சென்று, முதற் போரிலேயே பகைவர்களை முற்றிலும் அழித்தனன். பகைவர்தம் அரண்கள் தரைமட்டமாயின. மருதநில ஊர்கள் மண்ணோடு மண்ணாயின. கரும்பும் செந்நெல்லும் மயங்கிய வயல்களும், குவளையும் நெய்தலும் மயங்க, முதலைகள் களித்த பொய்கைகளும் பாழ்பட்டன. அவ்விடங்களில் நீரற்றுப் போனதால் அறுகும் கோரைப் புற்களும் அடர்ந்து பெருகின. வயலும் வாவியும் வேறுபாடற்ற நிலையில் நீரற்று முல்லைக்காடுகளாக மாறின. அக்காடுகளில் இரலையும் மானும் விளையாடித் திரிந்தன.
    பகைவர் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பெண்கள் நீரில் மூழ்கித் துாய்மையோடு அந்திப்பொழுதில் நந்தா