பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மு.வ. அவர்களது நாவல் திறன் தமிழ்ப் பண்பாட்டை, தமிழர்தம் நாகரிகத்தை, தமிழ் இலக்கியத்தின் இனிமையை, தமிழ் மொழியின் வளத்தை, தமிழ்ப் புலவர்கள் வாரி வழங்கிய வாழ்வியல் கருத்துக்களைத் தமது எழுத்தாலும், பேச்சாலும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எடுத்துக்கூறி, அவர்களைத் தமிழ் உணர்வுடையவர்களாக விளங்கச் செய்த தமிழ்ச் சான்றோர்களில் தலையாயவர் டாக்டர் மு. வ. அவர்கள். பைந்தமிழ் பரப்பும் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய அவர்கள், செந்தமிழ் வளர்க்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி, சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் விளங்கும் மதுரைப் பல்கலைக் கழத்தின் துணைவேந்தராகப் பாங்குடன் பணியாற்றினார்கள். அவர்கள் தமது எழுத்துக்களால் தமிழ் நாட்டு இளையவர்களின் நெஞ்சங்களில் இனிது கொலு விற்றிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள், 'முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவதோடு, நாட்டுக்கு நலந்தரும் புதுநெறிகளையும், புதுமைக் கருத்துக்களையும் போற்றும் புகழ்சால் அறிஞர்; நாடு போற்றும் நாவலாசிரியர்; நாடகாசிரியர்; ஆராய்ச்சியாளர்; ஈடும் இணையும் இல்லா எழுத்தாளர் மொழியியல் அறிஞர்; உரையாசிரியர்; கவிஞர் அரசியலறிஞர்; கற்றறிந்த கல்வியாளர். இங்ஙனம் பலதுறை அறிஞராக விளங்கினாலும், டாக்டர் மு. வ. ஒரு நாவலாசிரியர் என்றே மக்களால் பெரிதும் போற்றப் படுகின்றார். தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இன்று தமிழ் மக்கள் அனைவராலும் போற்றப் படுகின்ற டாக்டர் மு. வ, அவர்கள், 1970ஆம் ஆண்டு முடிய எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை74 ஆகும். அவற்றில்

மு. வ,-1