பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 பகைவர்க்கு வெம்மையைத் தந்தது. அவன் கோல் குடிகளுக்கு வளத்தையும் நல்வாழ்வையும் தந்தது. பாலைத்திணையின் பொருள் திருமாவளவன் பகைவரை ஒழிப்பதற்கு உறுதியிட்டு வைத்த வேலினும் வெய்யதாக கானம் விளங்கியது. அவன் கோலினும் தண்ணியதாகத் தலைவியின் தடமென் தோள்கள் விளங்கின. இதனை ஆசிரியர், "திருமாவளவன் தெவ்வர்க்கு ஒக்கிய வேலினும் வெய்ய கானம் அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே” என்று பாராட்டியுள்ளார். காட்டின் கடுமையினக் கருதியும், தலைவியின் தண்ணிய தோளினை எண்ணியும்தான் பிரிவினை மேற்கொள்ள இருந்த தலைவன் அதனை மேற்கொள்ளாது, பமுட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்' பிரிவை மேற்கொள்ள மாட்டேன் என்று உறுதி கூறி தலைவியின் அச்சத்தை நீக்கினன். இதுவரை கூறியவாற்றால், பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலை பண்டை நாகரிகம் பகரும் பைந்தமிழ் நூல் என்பது இனிது பெறப்படும். - பரணி & பரணி அச்சகம், இராயப்பேட்டை, சென்னை